
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
பதிகங்கள்

நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.
English Meaning:
Four finger-length above the tremulousNavel-Centre
Is the petalled Heart-Centre;
Two finger length still above is the Throat-Centre;
Those who can meditate on it in sea-like depth
Sure knew Him;
Him the Lord of Body Corporal.
Tamil Meaning:
சிவயோகியரேயாயினும், அனாகதத்தளவிலே நிற்பவர் ஆன்ம நிலையையே உணர்வர்; சிவ நிலையை உணர மாட்டார்.Special Remark:
``ஈத்த`` என்பனவும், ``ஈத்து`` என்பதும் குறுக்க லாயின. அவற்றுள் இறுதியில் நின்றது உவம உருபு. நடல் - நடுதல்; நிலை நிறுத்தல். பிராண வாயுவைக் கும்பித்தல். நாபி - மணிபூரகம். மடல் - தாமரை இதழ். வாணி - வாக்கு. ஆகுபெயராய் மத்திமை வாக்குக்கு இடமான விசுத்தியைக் குறித்தது. ``உள்ளே`` என்றது, `கீழே` என்றவாறு. ``கீழே`` எனப் பாடம் ஓதுதலும் ஆம். மணி பூரகத் திற்கும், விசுத்திக்கும் இடையில் உள்ளது, ``அனாகதம்`` எனப்படும் இருதயம். கடல் - கடலின் தன்மை. அது கரை இன்மையும், ஆழம் அறியப்படாமையும், தெளிவுமாம். சடலம் - உடல். அதன் தலைவன், உயிர். ``தியான யோகத்தை இருதயமட்டாகச் செய்து, அப்பால் ஏறமாட்டாதவர், ஆன்ம இயல்பையே உணர்வர்`` என்பதாம்.இதனால், ``தியான யோகத்தை முற்றப் பயிலல் வேண்டும்`` என்பது வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage