
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
பதிகங்கள்

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே.
English Meaning:
Alas! They Perform not DhyanaEven for once they meditate not
On the mystery of Jiva within body;
Even for once they meditate not
On Siva within Jiva;
Even for once they meditate not
On the mind where Siva dwells
Even once they meditate not
On the Lotus within the Lunar Sphere.
Translation: Dr. B. Natarajan
Tamil Meaning:
உலகர் பலரும் அழிபொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே யன்றி, அதனோடு வேறறக் கலந்து நிற்கின்ற அழிவில் பொருளாகிய உயிரை அறிதல் இல்லை. இனி, ஒரு சிலர் உயிரை அறியினும், அவ்வுயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிவனை அறிகின்றார்களில்லை. இனிச் சிலர், `உயிர்க்குயிராய்ச் சிவன் ஒருவன் இருக்கின்றான்` என்று உணரினும், `அவன், ஆஞ்ஞைத் தியானத்தால் காணத்தக்கவன்` என்று உணரமாட்டாதவராகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, `அவ்வாறு காணத் தக்கவன்` என்று உணர்ந்தும் ஒரு நொடி நேரமாயினும் அந்தத் தியானத்தைத் தலைப்பட எண்ணாமலே யிருந்தொழிவர்!Special Remark:
`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். `தியானத்தின் சிறப்பை அறிந்திருந்தும் அதில் நில்லாதவர் அறியாதா ரோடு ஒப்ப அறிவிலிகளே` என்றற்கு இங்ஙனம் அறியாமையது நிலையைப் பலபட வகுத்துரைத்தருளினார். நான்கிடத்தும் `ஒரு பொழுதும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `சிந்தை` என்பதுListen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage