
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
பதிகங்கள்

நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.
English Meaning:
Fixing the gaze on nasal pointRetaining the roaming breath within
They who can thus still the nadis,
Will sure reach the Goal
No fear of birth to be for them.
Tamil Meaning:
ஆஞ்ஞைத் தியானத்தை முறைப்படி செய்து அதனால் இன்புற்றிருப்பவர்க்கு இவ்வுடம்பு தரும் பயன் இவ்வின்ப நிலையேயாம். ஆகவே, இப்பயனை இவ்வுடம்பு தாராதொழியின், அதனால் பயன் வேறில்லை.Special Remark:
உயர்வு எழா - வெளியே போகாமல், `துயர் அற` என்றதனால், `இன்புற்று` என்பது பெறப்பட்டது. `தூங்குதல்` என்பது, அமைதியுற்றிருத்தலைக் குறித்தது. `இந்நிலை கூடுதல் அரிது` என்றற்கு, `வல்லார்க்கு` என்றார். `வல்லார்க்குப் பயன்` எனவே, `பயம் இல்லை` என்றது மாட்டாதார்க்கு ஆயிற்று.இதனால், `இந்நிலையைப் பெறாத வழி, யோகமேயன்றி, உடம்பும் பயன் இலதாம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage