
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
பதிகங்கள்

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
English Meaning:
Well may they practise Yoga eight-thousand yearStill they see not Lord,
Sweet as ambrosia
And dear like the apple of the eye;
But if within you seek Him enlightened
He within you is,
Even as reflection in the mirror.
Tamil Meaning:
நெடுங்காலம் யோகம் செய்யினும், மேற்கூறிய தியான நிலையை அடைய முயல்பவர் அரியர். அந்நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் இனிது விளங்குதல்போல, உயிர்க்குயிராய் நிற்கின்ற நிலை இனிது விளங்கும்.Special Remark:
``கண்`` என்றது, மேற்கூறிய அகக்கண்ணை. மூன்றாம் அடி, தியானத்தைப் பெறும் முறையை நினைப்பித்தது. ``உள்ளே`` என்றதை, `கண்ணாடி` என்பதன் பின்னும் கூட்டுக.``அடுத்தது காட்டும் பளிங்குபோல்``(குறள், 706) என்பதையும் நோக்குக.
இதனால், ஆஞ்ஞைத் தியானம் இல்வழி யோகத்தால் பயன் இன்மை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage