
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
பதிகங்கள்

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.
English Meaning:
If your eyes twain areOn nasal point fixed,
No sorrows befall you;
Perishes not your body;
Agitation none shall you have;
Feelings none;
Seekings none;
None that id ``I``;
You and Siva one become.
Tamil Meaning:
ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.Special Remark:
எனவே, ``இன்பமே உளதாகும்`` என்பதாம். ``நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்தல்`` என்பது, கிரியை நிலையில் செபம் முதலியவற்றில் இருவிழிகளையும் மூடி யொழியாமலும், அலர விழியாமலும் சிறிது திறந்த பார்வையுடன் மூக்கின் இருதுளைக்கும் மேலே உள்ள நுனிமூக்கை நோக்கி நிற்றலைக் குறிப்பது. அத்தொடரை இங்கு இயைபுபட எடுத்தோதி, ``நான், சிவன்`` என்னும் இரண்டு எண்ணத்தையும் புருவ நடுவிலே வைத்தல் என ``நாட்டம் இரண்டு`` என்பதற்கு உட்பொருள் கொள்ள வைத்தார். இங்ஙனம் உட்பொருள் கொள்ளாவிடில், இங்கு இது பயன் தாராமை அறிக. மனை, உடம்பு.இதனால், மேற்கூறியதற்குக் காரணம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage