
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
பதிகங்கள்

`நீஅது ஆனாய்` எனநின்ற பேரூரை
ஆய்`அது ஆனேன்` என்னச் சமைந்(து) அறச்
சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரரு
ளாய்அது வாய்அனந் தானந்தி யாமே.
English Meaning:
Mahavakyam: You Become That``You Become That``—
Thus the Great Expression (Mahavakyam) stood;
And I became That;
Thus to Siva Becoming
Nandi blessed me;
And as I became That
In Infinite Bliss I was immersed
Tamil Meaning:
`நீ அது ஆகிறாய்` என்னும் பொருளதாய் ஆசிரியர் மாணவனுக்கு உபதேசிக்கின்ற `தொம்தத்தசி` (தத்துவமசி) என்னும் அந்த மகாவாக்கியமே, மாணாக்கன் பயில்கையில், `நான் அது ஆனேன்` என்னும் பொருளதாகிய `அஹம்பிஹ்மாஸ்மி` என்னும் மகாவாக்கிய -மாய் நின்று, சிவனை அதன் பாசங்கள் முற்றும் அற்றொழியப் பண்ணி, வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்ட சிவமாகச் செய்யும். அங்ஙனம் பயில்கின்ற சீவன் முதலில் சிவனது அருளே தானாய்ப் பின்பு சிவனேயாய், அவனது முடிவில்லாத ஆனந்தத்தை அனுபவிப்பதாகும்.Special Remark:
பேருரை - மகாவாக்கியம். ஆய் அது - ஆசிரியரது உபதேசப் பொருளை வேதாகமங்களின் வழியால் சிந்தித்துத் தெளியப்படுகின்ற சிவம். ``அனந்தானந்தி`` என்பது வடமொழித் தீர்க்க சந்தி முத்தியில் ஆன்மாச் சிவத்தோடு சேர்ந்து சிவமாய் விடுமேயல்லது, அதன்பின் அது சிவனது ஆனந்தத்தை அனுபவிக்கும் பொருளாய் இராது`` எனச் சுத்த சைவர் கூறுவர், அதனை மறுத்ததற்கு `ஆனந்தமாம்` என்னாது, ஆனந்தியாமே`` என்றார்.இதனால், `மகாவாக்கியங்கள் `படர்க்கை, முன்னிலை, தன்மை` என்னும் இட வேறுபாட்டால் வேறு வேறு போலத் தோன்றுகின்றனவே யன்றிப் பொருளால் வேறல்ல` என்பது உணர்த்தி, அதனால், உப தேசத்தால் பெற்ற வாக்கியப் பொருளைப் பயிற்சியில் வைத்துப் பயிலும் சீவன் சிவன் ஆம் முறைமையும் அதன் பயனும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage