
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
பதிகங்கள்

தொம்பம் தத்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்தும்மேல் நாட ஏ
யும்பத மும்பத மாகும் `உயுர்பரம்
செம்பொறா ளான சிவம்`என லாமே.
English Meaning:
Beyond Jiva, Para and Siva StatesTranscend beyond Tvam-Pada, Tat-Pada and Asi-Pada
And seek beyond the triple Turiyas
Then is the State-beyond-all-states
The (One) Truth beyond Jiva; Para and Siva.
Tamil Meaning:
மேற்கூறிய, சீவ துரியம், சிவ துரியம் பரதுரியம் என்னும் மூன்று துரியத்திலுமே தொம்பதப் பொருளாகிய ஆன்மா, தத்பதப் பொருளாகிய சிவத்தை, அசிபதத்தின் வழியாக, மேல் நோக்கு உணர்வினால் உணருமாயின், பரதுரியத்திற்போலவே ஏனை, இரு துரியங்களிலும் அது சிவமாகியே நிற்கும் (சீவனாகி நில்லாது` என்பதாம்.)Special Remark:
அங்ஙனம் நோக்கி நிற்றலே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படும். இதனையே,``... ... ... ... எல்லாம் ஈச
னிடத்திலும், ஈசன்எல்லா இடத்தினிலும் நின்ற
அந்நிலைமை அறிந்(து) அந்தக் கரணங்கள் அடக்கி
அறிவதொரு குறிகுருவின் அருளினால் அறிந்து,
மன்னுசிவன் றனையடைந்து நின்(று) அவன்ற னாலே
மருவு பசு கரணங்கள் சிவகரண மாகத்
துன்னியசாக் கிரமதனில் துரிய தீதம்
தோன்றமுயல்; சிவானுபவம் சுவானுபூ திகமாம்``
எனவும்,
``சாக்கிரந்தே அதீதத்தைப் புரிந்தவர்கள், உலகில்
சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள்; இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுஎன்! இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தைஅடை பராவுசிவர் அன்றோ!
``ஆக்கும்முடி கவித்(து) அரசாண்(டு) அவர்கள் அரிவையரோ(டு)
அனுபவித்தங்கு இருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்``8
எனவும், சிவஞான சித்தி கூறிற்று.
``மும்மை தரும்வினைகள் மூளாவாம்; மூதுலகில்
அம்மையும் இம்மையே ஆம்``9
என்றதும் இந்நிலை நின்றாரை நோக்கியேயாம்
தொம்பதம் நாட` என இயையும் `தத்பத்தை அதிபதத்தால்` என உருபுகள் விரிக்க. `ஏயும் பதமும் பதமாகும்`` என்றது, `எந்நிலையில் நின்றாலும் அது பரதுரியநிலையேயாம்` என்றபடி, `பரமும், செம்பொருளும் ஆன சிவன்` என்க.
இதனால், `மகாவாக்கியங்களில் ஊன்றி நிற்கின் எந்நிலை யிலும் சிவ நிலை கூடும் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage