
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
பதிகங்கள்

பூரணி யாவது புறம்பொன் றிலாமையால்
பேர்அணி யாதது பேச்சொன் றிலாமையால்
ஓர்அணை யாதது ஒன்றும் இலாமையால்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.
English Meaning:
Nature of Confluent State in Tat-Tvam-AsiCompleteness it has none,
Limit it has none,
Speech it has none;
Attachment it has none;
Possession it has none;
Uncaused, of itself It reveals—
This It`s nature is.
Tamil Meaning:
(முன் மந்திரத்தில் ``மன்னன்`` என ஆண்பாலாகச் சொல்லப்பட்ட சிவம்) தனக்குப் புறம்பாகயாதொரு பொருளும் இல்லாதபடி எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்றல் பற்றி, `பூரணத்துவம் உடையது` என்று சொல்ல படுகின்றது. (அஃதன்றி, `அது தவிர வேறு பொருள் இல்லை` என்னும் கருத்தில் `அது பூரணத்துவம் உடையது` என்று சொல்லப்படவில்லை.)``அகிலாண்ட கோடி யெல்லாம்
தன் அருள் வெளிக்குளே தங்கும்படிக்கு இச்சை வைத்து``
என்னும் தாயுமானவர் பாடல் இங்கு நோக்கத் தக்கது.
வாக்கைக் கடந்து நிற்றலால் அஃது எந்த ஒரு பெயராலும் திட்டமாகச் சொல்ல ஒண்ணாதது. குணங்குறி ஒன்றும் இன்மையால் உயிர்களால் அனுமித்து உணரப்படாதது. ஆயினும் பிற காரணங்களால் காட்டப்படாது, தன்னாலே தான் காட்டப் படுவதாம்.
Special Remark:
``ஊரிலான் குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்பேரிலான், ஒரு முன்னிலான், பின்னிலான், பிறிதோர்
சாரிலான், வரல், போக்கிலான், மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்``9
என்னும் கந்த புராணச் செய்யுளையும்,
``ஒன்றும் குறியே குறிஆத லால், அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால் - ஒனறோடு
உவமிக்க லாவதுவும் தானில்லை``8
``காண்பாரார் கண்ணுதலாய், காட்டாக் காலே``3
என்னும் சாத்திர தோத்திரங்களையும் காண்க. ஓர் - ஓர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். தன்னாலே தான் காட்டப்படுதலாவது, ஞாயிற்றைக் காணலுறுவார்க்கு அது பிறிதோர் ஒளியால் காட்டப்படாது, அது தனது ஒளியாலே தான் காட்டப்படுதல்போல, அதனது அருளாலே அது காட்டப்படுதலாம். பூரணி - பூரணத்துவம் உடையது. உபநிடதம் முதற் பொருளைப் `பூர்ணம், பூர்ணம்` எனப் பலமுறை கூறும்.
இதனால், `சீவன் சிவனாவது அவனது அருளாலே யன்றித் தன்னாலன்று` என்பது கூறப்பட்டது. இது பற்றியே `அஸி` பதப் பொருள் திருவருள் ஆகின்றது.
``அவன் இவன் ஆனது அவன் அருளா லல்லது
இவன் அவன் ஆகான் என் றுந்தீபற;
என்றும் இவனே என் றுந்தீபற``l
என்பதனால், சீவன் சிவன் ஆம் முறைமையைத் தேர்ந்துகொள்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage