ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
    படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து
    நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக்
    கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.
  • 10. காயப் பரத்தின் அலைந்து துரியத்துச்
    சால விரிந்து குவிந்து சகலத்தில்
    ஆயஅவ் ஆறா றடைந்து திரிந்தேற்குத்
    தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.
  • 11. நானென நீயென வேறில்லை நண்ணுதல்
    ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று
    வானென வானவர் நின்று மனிதர்கள்
    தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.
  • 12. அவனும் அவனும் அவனை அறியார்
    அவனை அறியில் அறிவானும் இல்லை
    அவனும் அவனும் அவனை அறியில்
    அவனும் அவனும் அவன்இவன் ஆமே.
  • 13. நான்இது தான்என நின்றவன் நாடொறும்
    ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன்
    வான்இரு மாமழை போற்பொழி வான்உளன்
    நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.
  • 14. பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய்
    இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும்
    பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே
    திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.
  • 2. உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
    வியலார் பரமும்பின் மேவும் பிராணன்
    செயலார் சிவமும்சிற் சத்திஆ திக்கே
    உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.
  • 3. பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன்
    `நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள்
    உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது
    வைச்ச பதம்இது வாய்திற வாதே.
  • 4. பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
    ஒட்டடித் துள்ளமார் மாசெலாம் வாங்கிப்பின்
    தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
    வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.
  • 5. தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
    இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
    பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாம்
    கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்ட டேனே.
  • 6. கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு
    நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால்
    பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
    கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.
  • 7. கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
    கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினை
    கொண்டான் பலம்முற்றும் தந்தவன் கோடலால்
    கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.
  • 8. குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடில்
    நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
    பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
    பிறிக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.
  • 9. உணர்வுடை யார்கட் குலகமும் தோன்றும்
    உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
    உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
    உணர்வுட யார்கள் உணர்ந்துகண் டாரே.