
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
பதிகங்கள்

நான்இது தான்என நின்றவன் நாடொறும்
ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன்
வான்இரு மாமழை போற்பொழி வான்உளன்
நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.
English Meaning:
Lord`s Infinite BountyAs life and body alike feel
He in me stood in identity full
Bounteous as He is unto the rains from heavens,
I with the heavenly Lord, one became.
Tamil Meaning:
உயிர் என்றும் உடம்பு போல இருக்க அதன்கண் உயிர்போல நின்று அறிகின்ற ஒருவன் இருக்கின்றான். அவன், `இவ்வுயிர் நானே` எனத் திருவுளம் செய்து, அவ்வுயிரின் உள்ளத்தில் தனது கருணையை வானத்தில் உள்ள கரிய, பெரிய மேகம் மழையைப் பொழிவது போலப் பொழிவான். `இவ்வுயிர் யான்` எனத் திருவுளம் செய்கின்ற அவன் குருவுமாய் வந்து அருள்பவனாவான்.Special Remark:
``தான்`` இரண்டில் முன்னுத தேற்றப் பொருளிலும், பின்னது எழுவாய்ப் பொருளிலும் வந்தன. ``இதுதான்`` என்றது, `இந்த உயிர்தான்` என்றபடி. ``ஊன்`` என்பதன்பன் `ஆக` என்பது தொகுத்தலாயிற்று.`இதுதான் ஊன் ஆக, உயிர்போல் உணர்வான் உளன்; அவன், - இது நான்தான் - என நின்று, உளன், வான் இருமாமழை போல் பொழிவான்` - எனக் கூட்டியுரைக்க.
உளன் - உளம்; போலி. `உளனில் பொழிவான்` என்க. ஈற்றடியில், ``நான் இதுவாம்`` என்றது, முதல் அடியில் கூறியதனை மீட்டும் அனுவதித்ததாம். ``நாதன்`` என்பது குருவை உணர்த்துவதொரு பெயர்.
``இது நானே`` - என்றது ``சிவோதயம் அஸ்தி`` என்னும் சித்தாந்த மகாவாக்கியப் பொருளைக் கூறியவாறு, ஆசிரியன் மாணவனது உயிரை இவ்வாறு பாவிக்கும் பாவனையால் அவனைச் சிவமாகச் செய்வன் என்க. `குரு சிவனே` என்றற்கு, ``நான் இது வாம் பரன் நாதனும் ஆமே`` என்றார்.
இதனால் ஆசாரியனால் சீவன் சிவன் ஆதலாகிய ஞானச் செய்தி மரபு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage