
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
பதிகங்கள்

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினை
கொண்டான் பலம்முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.
English Meaning:
Siva by taking all, Gives AllHe marked me out his vassal to-be
My life, possessions and body He took as His own;
But as he it was that all my sustenance gave
How dare I say, He took anything from me?
Tamil Meaning:
சிவன், யான் அவனுக்கு அடிமையாதலை உண்மையாக உணரும்படி அவன் நேர் வந்து என்னை ஆட் கொண்டான். அதனால் என் ஆவி, உடல், பொருள் அனைத்தையும் தன்னுடையனவாக ஏன்று கொண்டான். அவையேயன்றி, யான் செய்யும் செயலால் விளையும் பயனையும் தன்னுடையனவாகக் கொண்டான். இங்ஙனம் அவைகளை அவன் கொண்டது புதிதாகாது முன்பே அவன் என்பால் கொடுத்து வைத்தவறஅறைத் திரும்பப் பெற்றுக்கொண்டதே யாகலின், `என்னுடையவைகளை அவன் கொண்டு போய்விட்டான்` என்று யான் எங்ஙனம் முறையிட முடியும்? முடியாது ஆகையால் யான் பேசாதிருந்துவிட்டேன்.Special Remark:
முதல் மூன்று அடிகளிலும் இரண்டாம் வேற்றுமை, தொடர்களின் இறுதிகளில் இறுதிகளில் தொக்கும். விரிந்தும் நின்றது. `அடியேன் குறிக்கொள்ள` என மாற்றி வைத்து உரைக்க.இதனால், `ஞானமாவது, உள்ளதாய், முன்பு உணரப்படாது இருந்ததனை உணர்தலேயன்றிப் புதுவதாய் விளைகின்ற ஒன்றை உணர்தல் அன்றஉ` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage