
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
பதிகங்கள்

பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய்
இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.
English Meaning:
Lord wrought Me to PerfectionHimself as Being Supreme
He stood not apart from me;
That the Lord Knows;
Like the body and life are We;
This the truth;
He to perfection wrought me
He the Lord of Immortals.
Tamil Meaning:
உண்மையை உண்மையாக உணர்ந்து உயிர்கள் செம்மை எய்தும் வண்ணம் செய்கின்ற சிவன், `தீர உயர்ந்த பெருந் தன்மையை உடைய தான் அங்கே` எனவும், `தீர இழிந்த சிறு தன்மையை உடையயான் இங்கே` எனவும் இவ்வாறு வேறு வேறாய் முன்பு இருந்ததும் இல்லை. (உம்மையால், இனி இருக்கப் போவதும் இல்லை) மற்று, உடலில் உயிர் வேறறக் கலந்திருப்பது போல அவன் என்றும் என்னுள் ஒன்றாய்க் கலந்தேயிருக்கின்றான்; ஆயினும் அவன் அறிவான்; யான் அறிந்திலேன்.Special Remark:
`இது பொழுது அவன் அருளால் யானும் அதனை அறிந்தேன்` என்பது குறிப்பெச்சம். `இவ்வாறு அறிந்த இதுவே ஞானம்` என்றபடி.இதனால், படலத்தால் மறைக்கப்பட்டிருந்த கண்ணை யுடையவன் அப்படலம் நீங்கியவுடன் முன் தான் காணாதிருந்த பொருள்களைக் காண்பது போன்றதே ஞானத்தைப் பெறுதல்` என்பதும், அங்ஙனம் கண்பெற்றவன் தன்முன் உள்ள பொருள்களைக் கண்டு மகிழ்தல் போன்றதே முத்திநிலையை எய்துதல்` என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage