
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
பதிகங்கள்

உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக்
கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.
English Meaning:
Lord appears as Siva Guru and gives initiationMy body, wealth and life,
He took from me as sacrificial offering,
Through ritual appropriate;
He directed his spiritual glance at me
And dispelled my Karma`s network to destruction;
And then He laid His hands on me
And planting His Feet on my head
In a trice imparted Spiritual Awareness
And thus my birth`s cycle He ended
He, the Nandi,
Through these acts of Diksha, successive.
Tamil Meaning:
எம் அருட்குரவராகிய நந்திபெருமான் எம் உடல், பொருள், ஆவி என்பவற்றை யாம் நீர் வார்த்து ஒப்புக் கொடுக்கச் செய்து அவை முழுவதையும் தம்முடையனவாக ஏற்றுக்கொண்டு, அதனால் விரிந்து கிடந்த எமது வினைப்பரப்பு முழுவதையும் ஒரு நொடியில் பற்றற்றொழியப்பண்ணி, அதன்பின் தமது திருக்கையை எம் தலைமேல் வைத்துத் தீண்டிப் பின்னும் தமது திருவடிகளை எம் தலைமேற் சூட்டி, இவ்வாற்றால் யாராலும் உரைப்படாதவற்றை யெல்லாம் உணரும் பேரறிவை எமக்குத் தந்து, வலிமை வாய்ந்த பிறவித் தொடக்கு அற்றொழியும்படி அருள்புரிந்தார்.Special Remark:
இதனால், `மக்கட்கு ஞானம் கிடைக்குமாறு இவ்வாறு` என்பது உணர்த்தப்பட்டது. நூல் சகலருக்கேயாதலால், இங்குக் கூறிய முறையும் சகலர்க்கேயாதல் தெளிவு.ஞானம் இறைவனாலல்லது தரப்படாது. `அதனை அவன் சகலர்க்கு ஆசான் மூர்த்தியாய் நின்றே அருளுவான்` என்க. பிரளயா கலர்க்கு ஒருகால் தனது இயற்கை வடிவில் முன்தோன்றியும், விஞ்ஞான கலர்க்கு உயிர்க்குயிராய் உள்நின்றேயும் உணர்த்துவான்.
ஞான நெறியில் நிற்பவர் தமது உடல், பொருள், ஆவி மூன்றனையும் சிவனுடையனவாகவே உணர்ந்து அவற்றைக் குருவினிடத்தில் நீர் வார்த்து ஒப்புவிக்குமிடத்து, `பொருள்` எனப்படுவன பொன், மணிமுதல் பல்வேறு வகையான செல்வங்கள் மட்டும் அல்ல; `யான் இதனைச் செய்தேன்; என் செயல்கள் இவை` எனப் பற்றி நிற்கும் வினைகளும் `பொருள்` எனப்பட்டு, அவைகளும் நீர்வார்த்து ஒப்புவிக்கப்படும். முதல் நாள் ஒப்புவித்த அந்த உணர்வு எந்நாளும் நீங்காது நிலைத்திருத்தற்குச் சிவனை நாடோறும் வழிபடும் போதெல்லாம் வழிபாட்டின் முடிவில் அந்த வழிபாட்டின் பயனையும் ``சிவோதாதா, சிவோபோக்தா`` என்னும் மந்திரத்தை ஓதி நீர்வார்த்து அவனிடமே ஒப்புவிப்பர். அதுவும் இங்குச் `சம்பிரதாயம்` என்றதனால் பெறப்படுகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage