ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பிறையுட் கிடந்த முயலை எறிவான்
    அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
    கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
    `நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.
  • 10. போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி
    ஏற்றியே யென்றும் எறிமணி தான்அகம்
    காற்றின் விளக்கது காயம் மயக்குறல்
    மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.
  • 11. நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
    ஊடுபுக் காரும் உணர்ந்தறி வார் இல்லை
    கூடுபுக் கேறலுற் றேன் அவன் கோலம் கண்
    மூடிக்கண்டேன் உல கேழும்கண் டேனே
  • 12. ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும்
    தேனும் உடைய சிறுவரை ஒன்றுகண்(டு)
    ஊனம்ஒன் றின்றி உணர்தல்செய் வார்கட்கு
    வானகம் செய்யும் மறவனும் ஆமே
  • 13. மாமதி ஆம்மதியாய் நின்ற மாதவர்
    தூமதி யாகும் சுடர்பர மானந்தம்
    தாமதி யாகச் சகம்உணச் சாந்திபுக்(கு)
    ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.
  • 14. பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்(டு)
    இதமுற்ற பாச இருளைத் துரந்து
    மதம்அற்(று) `எனதியான்` மாற்றிவிட் டாங்கே
    திதம்உற் றவர்கள் சிவசித்தர் தாமே
  • 15. சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
    சுத்தாசுத் தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர்
    முத்தர முத்திக்கும் மூலத்தர் மூலத்துச்
    சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.
  • 2. கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக்
    கருந்தாழ் கயத்தில் கரும்பாம்பு நீங்கப்
    பெருந்தன்மை பேசுதி ஒழி நெஞ்சே
    அருந்தா அலைகடல் ஆறுசென் றாறே.
  • 3. கருதலர் மாளக் கருவாயில் நின்றே
    பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
    மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
    தருவலர் வேட்ட தனிஉம்பர் ஆமே.

  • 4. பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
    இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
    கணம்பதி னெட்டும் கழலடி காண
    வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.
  • 5. என்னிலும் என்உயி ராய இறைவனை
    பொன்னிலும் மாமணி யாய புனிதனை
    மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை
    உன்னில் உம் உன்னும் உறும்வகை யாலே.
  • 6. நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
    ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும்
    வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்(து)
    ஒன்றா உணரும் ஒருவனும் ஆமே.
  • 7. நுண்ணறி வாய் உல காய் உல கேழுக்கும்
    எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப்
    பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை
    விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.
  • 8. விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
    கண்ணற உள்ளே கருதிடில் காலையே
    எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
    பண்ணிடில் தன்மை பராபர னாகுமே.
  • 9. ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
    பின்றான் அருள்செய்த பேரரு ளாளவன்
    கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
    பொன்றாத போது புனைபுக ழானே.