
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
பதிகங்கள்

ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும்
தேனும் உடைய சிறுவரை ஒன்றுகண்(டு)
ஊனம்ஒன் றின்றி உணர்தல்செய் வார்கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே
English Meaning:
Vision of Lord WithinI behold the Little Mount within
In it was Divine Glory,
Abiding Jnana and nectar sweet
For them that realize Him in (love) unfaltering,
He creates the very Heaven within;
He, the compassionate One.
Tamil Meaning:
யோகக் காட்சி பற்றி, `முக்காலமும் உணர்ந்தவர்` எனப் பலரும் கூறப்பட்டுக் குவியும் புகழாகிய உயர்வையும், அவ்யோகத்தாலே பிறர் ஒருவரால் அசைக்க ஒண்ணா அருள் உணர்வாகிய துளங்கா நிலையையும், அமுதமாகிய தேனையும் உடைய ஒரு சிறு குன்று மக்கள் எல்லாரது உடம்பிலும் உள்ளது. அதனை உணர்ந்து, ஏறும் வழியறிந்து ஏறி, அதனை உணர்வினால் அடைந்த தவத்தோரை, அவர் உடம்பு நீங்கிய பின்னர்த் தனது பேருலகில் ஏற்றுகின்ற ஆண்மையுடையவனாகவும் எங்கள் சிவன் இருக்கின்றான்.Special Remark:
யோக நெறியில் பருவ நடு `மேரு` எனப்படுதல் பற்றி, அதனை ``வரை`` என்கின்றவர், அஃது எண் சாண் உடம்பினுள் ஓரிடத்ததாதல் பற்றி ``சிறுவரை`` என்றார். `நுண்ணியதாகக் காணத்தக்கது` என்றலும் கருத்து. `உடம்பினுள்` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. அவ்விடத்துப் பருகி இன்புறுதற்கு ஏதுவாய் உள்ள அமுதத்தை, ``தேன்`` எனச் சிறப்புருவகமாகக் கூறி, ஏனைய, `புகழ், ஞானம்` என்பவற்றை உருவகம் செய்யாது வாளா கூறினமையின், இஃது ஏகதேச உருவகம். ``கண்டு`` என்றது, காணுதற்கு அருமை குறித்தது. செய்தல் -தருதல். `ஏனையோர் அது மாட்டார்` என்பது உணர்த்துதற்கு மாட்டுவானை, ``மறவன்`` என்றார். மறவன் - வீரன் உம்மை சிறப்பு. இங்கும் எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.இதனால், சிவநெறி நின்று சிவயோகம் செய்யின், புகழும், ஞானமும், இன்பமும், வீடும் பெறலாம்` என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage