
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
பதிகங்கள்

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வார் இல்லை
கூடுபுக் கேறலுற் றேன் அவன் கோலம் கண்
மூடிக்கண்டேன் உல கேழும்கண் டேனே
English Meaning:
God Vision in Yoga WayI sought my Nandi within
And there I met Him;
They seek Him not within their hearts.
And so know Him not;
In yogic way I entered within
And ascended Adharas;
And eyes closed in trance
I saw His From Divine;
And the Seven Worlds too.
Tamil Meaning:
என்னைத் தானே தேடிக்கொண்டு வந்து என்னுள்ளேயிருக்க ஒருப்பட்டுவிட்ட சிவனை என்னுள்ளே புகுந்து அறிகின்றவர் ஒருவரும் இல்லை. (ஆகவே, வேறிடத்தில் அவனை அறிதலும் இயலாமை வெளிப்படை) யான் வெளியே சென்ற அலையாமல் என் உடம்பினுள்ளே கீழ் இருந்து மேல் ஏறிச் சென்று பொழுது அவனது அழகைக் கண்டேன்; காணுங்கால் கண்ணைத் திறந்து பார்த்துக் காணாமல் கண்ணை மூடிக்கொண்டே கண்டேன். அப்பொழுது அவனை மட்டுமா கண்டேன்? ஏழுலகங்களையும் கண்டேன்.Special Remark:
``தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்வான்வார் கழல்``*
எனவும், ``தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்` எனவும் அருளிச் செய்தவாறு, பக்குவம் எய்திய ஆன்மாக்களை அவை பக்குவம் எய்தியது உணர்ந்து தானே சென்று அடைந்து அருளுபவன் சிவன் ஆதல் பற்றி, நேடிக்கொண்டென்னுள்ளே நேர்தரு நந்தியை`` என்றார். ``கூடு புக்கு ஏறலுற்றேன்`` என்றது மூலாதாரத்தினின்று ஆறு ஆதாரங்களையும் நிராதாரத்தில் யோக நெறியால் சென்றமையை, ``கண் மூடி`` என்றது அந்நெறியைக் குறித்தற்கு. யோகக் காட்சியில் அவனைக் கண்டவர்கட்கு அவனது அருளால் எவ்விடத்திலும் எக்காலத்துப் பொருளும் இனிது விளங்குதலைக் குறிக்க, ``கோலம் கண்டேன் உலகேழும் கண்டேன்`` என்றார். ``ஆரும் உணர்ந்தறிவார் இல்லை`` என்றதற்கு, இறைவன் யோகியர் உள்ளத்தில் விளங்குதல் போலப் புற இடங்களில் விளங்குதல் இல்லை` என்பதே கருத்து. இக்கருத்தே பற்றி அம்மை திருவந்தாதியிலும்,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``l
என்று அருளிச் செய்யப்பட்டது. இதில் அன்பர் உள்ளம் குறிக்கப்பட்டது.
``காலையும், மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம், ஆரூர் அரனெறி யார்க்கே``3
என்ற அப்பர் திருமொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
இதனால், யோக முயற்சியும், அன்பும் சிவனை அடைதற்கு வழியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage