
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
பதிகங்கள்

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்றான் அருள்செய்த பேரரு ளாளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே.
English Meaning:
He is of Infinite GraceAs One He pervades the seven worlds all,
He, of yore, His Grace on Jiva conferred;
He, Lord of Grace infinite;
Supreme is He in Jnana
Of the holy ones of constant heart;
He who is festooned in flower unfading,
He, the Famed One.
Tamil Meaning:
சிவன், தான் பொருளால் ஒன்றாயினும், எண்ணில்லாத பல பொருள்களிலும் நிறைந்திருப்பவன் (என்றது, `அவ்வாறு வியாபிக்கும் சத்தியை உடையவன்` என்றபடி) ஆயினும் தன்னைச் சார்ந்தவர்க்குச் சார்ந்தபின்பே அருளும் பேரருளை யுடையவன். அன்பு செய்யும் மனத்தினர் தாம் அறிந்தவாறு செய்யும் செயல்களுக்கெல்லாம் இணங்குபவன். அன்பர்கள் பலவாய் நிறைந்த மலர்களைத் தூவிப் புகழும் கெடாத புகழினையுடையவன்.Special Remark:
`அவனை அணுக வேண்டினார்க்கு அணுகுதல் எளிதேயாம்` என்பது கருத்து. `உலகு ஏழும் உடன் பரந்தவன்` என மாற்றியுரைக்க, எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது. உடன் - ஒருசேர. `ஆளவன்`` என்பதில் முதலில் நின்ற அகரம் விரித்தல். கன்றாமை - வெறாமை அது வெறுத்தலின் மறுதலையாகிய விரும் -புதலைக் குறித்தது, ``கல்வி`` என்றது, கற்றுச் செய்யும் செயல்களை, `அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளுபவன்` ஆதலை `கன்றா மனத்தார்தம் கல்வியுள்நல்லவன்`` என்றார். ``பொன்றாத`` என்பதைப் புகழுக்கு அடையாக்குக.இதனால், `சிவனது இயல்பை உணரவல்லார்க்கு அவனை அடைதல் எளிது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage