
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
பதிகங்கள்

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர்
முத்தர முத்திக்கும் மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.
English Meaning:
Siddhas Are Like Sadasiva HimselfSiddhas are those who Siva saw;
Soaked in Suddha-Asuddha,
Yet soaked are not;
Muktas are they,
And source of Mukti, too, are they;
Possessed are they of Muladhara prowess
Alike are they unto Sadasiva.
Tamil Meaning:
சிவஞானத்தால் சிவதரிசனத்தைப் பெற்றோர் யாவரும் சிவனைப் பெற்றவராகவே எண்ணப்படுவர். (அவர் பின்பு பதமுத்திக்கு மேலான அபர முத்தி பரமுத்திகளை அடைவர் ஆதலின்,)``பரஞானத் தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்.`` l
என்றபடி அவர்கள் `சுத்தம், அசுத்தம்` என்னும் இருவகைப் பிரபஞ்சத்துள் எதில் இருப்பினும் அதில் பற்றற்றேயிருப்பர். அவர், `பதமுத்தி, அபரமுத்தி, பரமுத்தி` என்னும் மும்முத்திகளையும் தம்மை அடைந்த மாணாக்கர்க்கு அளிக்க வல்ல ஆசிரியர்களும் ஆவர். இனி மூலாதாரத்தில் ஒடுங்கியிருக்கும் குண்டலி சத்தியை எழுப்பி அதன் பயனைப் பெற்ற யோகியரும் சதாசிவ மூர்த்திபோல அபர ஞானமாகிய கலைஞானங்களை வழங்கத் தக்கவராவர்.
Special Remark:
`சீருடன் தோயாதவர்` என இயைக்க. சீர் - சிறப்பு திருவருள். `அதனுடனேயிருந்துகொண்டு, தோய்வின்றி இருப்பர்` என்க சத்தியைப் பெற்றவர் சத்தர். சதாசிவமூர்த்தி பரஞானத்தையும் தருவபர் ஆயினும், அவர் வேதாகமங்களை அருளிச்செய்து, பிறர்க்கு அறிவுறுத்தினமையே இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதனால், சிவஞானிகளும், சிவயோகிகளுமே ஆசிரியராவர் என்பது உணர்த்தும் முகத்தால், பிறரை ஆசிரியராகக் கொண்டு மயங்குதல் கூடாமை கூறி முடிக்கப்பட்டது.
முதல் தந்திரம் முதலாகச் சில இடங்களில் கூறியவற்றையே இங்குக் கூறினார். ஆயினும் அவை சுபக்கத்தாரை நோக்கி உண்மை யுணர்த்தலாகக் கூறப்பட்டன; இவை பரபக்கத்தாரை நோக்கி, அறிவுரையாகக் கூறப்பட்டன. இவ்வேற்றுமை உண்மையால், இவை கூறியது கூறல் ஆகாமை உணர்க. இங்ஙனமாகவே, இவ்வாறு உரையாதார்க்கு இவை கூறியது கூறல் ஆதலையும் உணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage