
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
பதிகங்கள்

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்(டு)
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதம்அற்(று) `எனதியான்` மாற்றிவிட் டாங்கே
திதம்உற் றவர்கள் சிவசித்தர் தாமே
English Meaning:
Siva Siddha StateThey abandoned Muktis three as vain;
They dispelled enticing darkness of Pasa,
They rid themselves of Anava,
They transcended ``I`` and ``mine`` consciousness,
They in constancy remained,
They, verily, are Siva Siddhas.
Tamil Meaning:
`சாலோகம், சாமீபம், சாரூபம்` மூன்றும் பத முத்திகளாம். சிலர் இவற்றையே வேறு வகையாகக் கூறி `பரமுத்தி` எனச் சாதிப்பர். அவற்றில் எல்லாம் இருள்மலம் ஆகிய ஆணவம் பற்றறக் கழியாமையால் அதன் காரியமாகிய துன்பம் அவ்விடங்களில் சிறிது சிறிது உள்ளதேயாம். ஆகையால், `அவை குறையுடையன` என்று அறிந்து, அவற்றோடு நிற்றலை விடுத்து. ஆணவம் பற்றற நீங்கினமையால், அதன் காரியமாகிய மயக்கமும், `யான், எனது` செருக்கும் பற்றறக் கழிய, அப்பற்றுக்களை இயல்பிலே இல்லாதவ னாகிய பரம சிவனிடத்தில் அடங்கி நிலைத்திருப்பவர்களே உண்மை -யில் சிவனைப் பெற்றவராவர்.Special Remark:
`அயன், அரி, அரன்` என்னும் மூவர் பதவிகளைச் சிவநூல்கள் ஓரிடத்தும் `முத்தி` என்றல் இல்லையாகலின் அவைகளை மூனறு `பத முத்திகள்` என்றல் கூடாமையறிக. இதம் உற்ற பாசம் - பெத்த நிலையில் இன்பம்போலத் தோன்றிய பாசம். ``ஆங்கு`` என்றது பண்டறி சுட்டு திதம் - நிலைபேறு `இந்நிலையை அடைந்தவர்களே நிலை பெற்றவர்` என்றதனால், பதமுத்தியடைந்தவர்கட்கும் பின்னர்ப் பிறப்புவருதல் உண்டு என்பது,``தவம் செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து
பவம் செய்து பற்றறுப்பா ராகத் - தவம் செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றாசூழ் சொல்லுமாம் கண்டு``
என்பது சிவஞான போதம்.* `பரமுத்தி யொழிந்த ஏனைய முத்திகள் இன்பநிலை ஆகா` என்பதைச் சிவஞான சித்தி கீழ்க்காணுமாறு விளக்கும்.
``பினாதி அருள் பெற்றவர்கள் நித்தஉரு வத்தைப்
பெற்றிருக்கை முத்தியெனில், பெறும்பதமே இதுவும்;
இனாதுநிலை இதுதானும்; காயம் உண்டேல்,
இருங்கன்மம், மாயைமலம் எல்லாம் உண்டாம்.`` 9
சித்தி - பேறு. சித்தர் - பேறு பெற்றவர்.
இம்மந்திரம் அகச் சமயத்தார்க்கு அறிவுறுத்தியது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage