
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
பதிகங்கள்

பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.
English Meaning:
You Can See Lord Only if You Hold Him in Your Heart``I shall smite the hare in the moon``
Thus saying
A man unsheaths his jewelled sword;
Like him are they
Who say,
``We the blue-throated Lord will see,
We know the Way;``
Such shall never see,
As in their hearts they hold Him not.
Tamil Meaning:
`சந்திரனிடத்து உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர் நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக் கூறி உண்மை ஞானியரை இகழ்வர்.Special Remark:
`முயல்` எனப்படுவது, உண்மையில் முயலாகாமை போல, ஞானியர்பால் பிறர் குறையாகக் காண்பனவும் உண்மையில் ஆகாமையும் இவ்வுவமையால் கொள்ளத் தக்கது. `ஞானமில்லாரது இகழ்ச்சிகள் ஞானியைச் சார மாட்டாமையே யன்றிச் சார்தற்கு யாதும் இயைபும் இல்லை` என்பது இவ்வுவமையால் கூறப்பட்டதாம்.``எறிவான்`` வான் ஈற்று வினையெச்சம். ``நெஞ்சு`` என்றது அறிவை. `அது குருவுபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியும் அறிவு` என்க.
இதனால், `உண்மையுணராதாரது இகழ்ச்சியால் உண்மை யுணர்ந்தார்க்கு வருவதோர் இழுக்கில்லை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage