
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
பதிகங்கள்

கருதலர் மாளக் கருவாயில் நின்றே
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் வேட்ட தனிஉம்பர் ஆமே.
English Meaning:
Perform TapasIf you seek your enemies (Malas) to perish,
Why fight at the Gate of Birth?
Silly heroism indeed!
If suitable the Tapas of holy ones are,
He, who all gifts gives,
Will with Celestials seat them.
Tamil Meaning:
பகைவரைப் போர்க்களத்தில் எதிர்த்துப் போர் செய்யாது, அவர்தம் நகரத்தை முற்றுகையிட்டே காலத்தைப் போக்குதல் புல்லறிவாண்மையாகும். சிவநெறியைச் சாராதவர் செய்யும் பெரிய தவங்கள் எல்லாம் அப்புல்லறிவாண்மையை ஒக்குமேயானால், அவற்றால் தரப்படும் பயன்கள் எல்லாம் சுவர்க்க போக வாசிகளாய்ச் சில காலம் வாழ்ந்திருத்தலேயாகும்.Special Remark:
`முத்திப் பயனை அவை தரமாட்டா` என்பதாம். ``கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்``* என மேலே கூறினமையால், ``மருவலர்`` என்றது சிவனை மருதாவர்களை யாயிற்று. ``ஒத்தால்`` என்னும் `செயின்` என் எச்சம் தெளிவின் கண் வந்தது, ``நீரின்றமையா துலகெனின்``* என்பதிற் போல ``ஆமே`` என்பது, `ஆகும் அதுவே` எனப் பொருள்தந்தது.``பசித்துண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்``
என்னும் சிவஞான போதத்தை* நோக்குக. `பிறவிக்குக் காரணமான வினைகளை வெல்வதற்குப் பசு புண்ணியங்களைச் செய்தல்` என்பது இங்குக் கூறிய உவமையால் குறிக்கப்பட்ட பொருள்.
இதனால், பதி புண்ணியங்களை உணராது பசு புண்ணியங் களையே புகழ்வாரது நிலைமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage