ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
    அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா
    மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம்
    பதியிற் பதியும் பரவுயிர் தானே.
  • 10. வேறாம் அதன்தன்மை மேலும்இக் காயத்தில்
    ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
    பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமா
    ஊறா உயிர்த்துண் டுறங்கிடும் மாயையே.
  • 11. தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி
    சிற்பரந் தானே செகம்உண்ணும் போதமும்
    தொற்பதந் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்(கு)
    அப்புறம் அற்றதிங் கொப்பில்லை தானே.
  • 12. பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
    துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக்
    கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே
    மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.
  • 13. வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற(து)
    அளியா கியதற் பரங்காண் அவன்றான்
    வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற
    வெளியாய சத்தி அவன்வடி வாமே.
  • 14. மேருவி னோடே விரிகதிர் மண்டிலம்
    ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
    சீர்தவம் செய்யின் சிவனருள் தானாகும்
    பேரவும் வேண்டா பிறிதில்லை தானே.
  • 2. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
    சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
    நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
    போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.
  • 3. துரியங் கடந்து துரியாதீ தத்தே
    அரிய இயோகங்கொண் டம்பலத் தாடும்
    பெரிய பிரானைப் பிரணவக் கூத்தே
    தெரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.
  • 4. செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல்
    அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப்
    பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில்
    செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.
  • 5. வைச்ச கலாதி வருதத் துவம்கெட
    வெச்ச இருமாயை வேறாக வேரறுத்(து)
    உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
    அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
  • 6. என்னை யறிய இசைவித்த என்நந்தி
    என்னை யறிவித்(து) அறி யாத இடத்துய்த்துப்
    பின்னை ஒளியில் சொருபம் புறப்படத்
    தன்னை யளித்தனன் தற்பர மாகவே.
  • 7. பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
    நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள்
    அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித்
    தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.
  • 8. சத்தின் நிலையினில் தானான சத்தியும்
    தத்பரை யாய்நிற்கும் தான்ஆம் பரற்குடல்
    உய்த்தகும் இச்சையில் ஞானாதி பேதமாய்
    நித்தம் நடத்தும் நடிக்கும் மா நேயத்தே.
  • 9. மேலொடுகீழ் பக்கம்மெய் வாய்கண்ணா நாசிகள்
    பாலிய விந்து பரஉட் பரையாகக்
    கோலிய நான்கவை ஞானம் கொணர்வித்துச்
    சீலமி லாஅணுச் செய்திய தாகுமே.