
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
பதிகங்கள்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.
English Meaning:
Nature of PatiThe Pati (Lord) has
Neither Beginning nor End;
He is Divine Light Resplendent;
He is seen and yet unseen;
Those who attain Jnana
Of that Para
Are Holy indeed.
Tamil Meaning:
பதியாகிய பரம்பொருள் தோற்றமும் அழிவும் இல்லாதது. வியாபகமான பேரொளியாயும், அப்பொழுதே உயிர்க் குயிராய்க் கலந்து நிற்கும் மி நுண்ணிய விளக்காயும் உள்ளது. அஃது ஏனைப் பொருள்கள்போல எல்லார்க்கும் இனிது விளங்கித் தோன்றாது, ஒரு சிலர்க்கே விளங்கித் தோன்றுவதாய் நின்றே, கோட்டம் இன்றி, நடுவு நிலையதாயே உள்ளது. காலத்தைக் கடந்ததாகிய அந்தப் பரம் பொருளின் இயல்புகளை உணர்ந்தவர் தவம் செய்தவராவர்.Special Remark:
`ஆதியும் அந்தமும் இல்லாதது` என வேறு கூறற் பாலதனை ஒன்றாக உடம்பொடு புணர்த்துக் கூறினார். ``அரும்பதி`` என்பதனை முதலிற் கொள்க. ``பரஞ்சுடர்`` என்பதில் பரம் - மிகு நுண்மை. பரபோதம் - பரத்தை உணரும் போதம். புண்ணியம், சிவபுண்ணியம். இதுவே தவம் ஆதல் அறிக.இதனால், பரலக்கணம் மற்றும் சில கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage