
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
பதிகங்கள்

மேலொடுகீழ் பக்கம்மெய் வாய்கண்ணா நாசிகள்
பாலிய விந்து பரஉட் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர்வித்துச்
சீலமி லாஅணுச் செய்திய தாகுமே.
English Meaning:
Bindu Sakti Imparts Power to Cognitive OrgansFrom within Parai
Expanded Bindu Sakti;
From above descending, to here below,
It imparted sentience to the cognitive Organs four,
—This the story of Jivas,
That inherent no sentience has.
Tamil Meaning:
முன் மந்திரத்தில் கூறிய சத்தி மேல், கீழ், புடை என்னும் இடங்களையும், மெய், வாய், கண், நா, மூக்கு என்னும் ஐம் பொறிகளையும், விந்து, நாதம், பர நாதம் என்னும் வாக்குகளையும், அவைகட்குப் பற்றுக் கோடாய் நின்று அவற்றின் பெயர்களையே தாமும் பெற்று நிற்கின்ற சுத்த தத்துவங்களையும் இங்ஙனம் பாகுபட்ட பல பொருள்களை உண்டாக்கி அவற்றால் எல்லாம் சரியை முதலிய நான்கினாலும் ஞானத்தை வருவித்து, இவ்வாறெல்லாம் அஞ் ஞானத்திற் கிடக்கின்ற உயிர்களை ஈடேற்றுதலாகிய செயல்களை உடையதாய் நிற்கும்.Special Remark:
`ஆக்கப்படும் பொருள்கள் அளவில்லன` என்பது தோன்றுதற் பொருட்டுச் சிலவற்றை எடுத்து எண்ணிக் காட்டினாலே யன்றி, அனைத்தையும் எடுத்துக் கூறிற்றிலர். ஆகவே, அவற்றை உபலக்கணமாகக்கொண்டு, ஏனையவற்றையும் அறிதல் வேண்டும். பாலிய - பாகுபட்ட. கோலிய - வரம்பு செய்யப்பட்ட. ``அவை`` பகுதிப்பொருள் விகுதி. `நான்கவற்றால்` என உருபு விரிக்க. சீலம் - தூய்மை. `தூய்மை இலா` எனவே , மாசுடைமை பெறப்பட்டது. அணு - உயிர். அணுச்செய்தி - அணுவைப் பற்றிய செயல்.இதனால், முன் மந்திரத்தில், `நித்தம் நடத்தும்`` எனத் தொகுத்துக் கூறப்பட்ட செயல்கள் ஒருவாறு வகுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage