
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
பதிகங்கள்

வைச்ச கலாதி வருதத் துவம்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்(து)
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
English Meaning:
Lord Accepts Jiva in His GraceFaded have they,
Kalas and other Tattvas (below);
Sundered were they,
The Mayas two, left behind;
And after taking me into the baptismal font of Jnana
He made me in Him unite;
Dispelling my fears
He accepted me in His Grace,
He, Nandi Holy.
Tamil Meaning:
எனக்குக் குருவாகிய நந்திபெருமான் சிவபெருமானால் எனக்கென என்னோடு கூட்டி வைத்த கலை முதல் நிலம் ஈறாக வருகின்ற தத்துவங்கள் எல்லாம் தம்தன்மை கெட்டுச் சிவ கரணங்களாகும் படியும், பின்பு அத்தத்துவங்கட்கு முதலாகிய அசுத்தமாயை. அதன் காரியங்களைச் செலுத்தி நிற்கின்ற கருவிகட்கு முதலாகிய சுத்தமாயை ஆகிய துன்பத்தைத் தரும் இருமாயைகளும் என்னைப் பொறுத்த மட்டில் காரண மாதற்றன்மை அடியோடு கெடும்படியும் செய்து, அதனால், யான் தடத்தசிவத்திற்கு மேலேயுள்ள சொரூபசிவத்தைத் தலைப்படும்படி. `இனியும் பிறவி வருமோ` என்னும் அச்சம் நிகழாதவாறு என்னை ஆட்கொண்டருளினார்.Special Remark:
ஏகாரம் தேற்றம். அதனால், `சிவன் இவ்வாறு சுத்தான்ம சைதன்னியத்தில் அதுதானேயாகும்படி ஆவேசித்து நின்று. அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தந்து, அது வழியாக வீடுபேற்றைத் தரும்` என்பது தோற்றுவிக்கப்பட்டது சிவஞான போதத்திலும் இவ்வாறே.``இவ்வான்மாக்க ளுக்குத் தமது
முதல்தானே குருவுமாய் உணர்த்தும்
என்றது,
அவன் அன்னிய மின்றிச் சைதன்னிய
சொரூபியாய் நிற்றலான்`*
எனக் கூறப்பட்டது வெச்ச - வெச்சென்ற; `கொடிய` என்றபடி உச்சம் - மிக மேலேயுள்ள இடம்.
இதனால், பரம்பொருள் உயிர்கட்கு முடிநிலைப் பயனை அருளுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage