
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
பதிகங்கள்

வேறாம் அதன்தன்மை மேலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமா
ஊறா உயிர்த்துண் டுறங்கிடும் மாயையே.
English Meaning:
Maya, Little Light Leading to Great LightThen separate arose Maya from Parai
And the Caused Tattvas and experiences six
The body is an heir to;
Feeling, breathing, eating, and sleeping
Are all enjoyments that Maya gives;
She is the little light within,
That kindles the Great Light to reach.
Tamil Meaning:
முன் மந்திரத்தில், `அணு` எனக் கூறப்பட்ட உயிரின் தன்மை தனியானது. ஆகவே, காணப்படாது நிற்கின்ற அந்த உயிருக்குக் காணப்படுகின்ற இந்த உடம்பில் உள்ள ஆறு அத்துவாக் -களும் உபாதிகளேயாம். அஃதாவது, அதனை மாசுபடுத்துகின்ற வேற்றுப் பொருள்களேயாம். அதனால், முப்பத்தாறு தத்துவங்களும் உயிர் தான் பெறுதற்குரிய மேலான ஒளியை அடைதற்குத் தூண்டு கின்ற சிறிய ஒளியாய் உதவுவதால், மாயையாலே உயிர் உறுதல், உயிர்த்தல், உண்டல் முதலியவைகளைச் செய்து, பின் அதிலிருந்து நீங்கியும் நிற்கும்.Special Remark:
`அதன் தன்மை வேறாம்` எனவும், `ஆறு உபாதியாம்` எனவும் மாறிக் கூட்டுக. `ஆறும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று. மேலும் - வேறாதல் மேலும், `ஆறும் உபாதியாம்` என முடிக்க. ஆறத்துவாக்களில் தத்துவங்கள் சிறந்தமை பற்றி அவற்றையே வேறெடுத்துக் கூறினார். `பரவொளிக்கு` என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. அதனை, `பர வொளியை அடைதற்கு` என விரிக்க. `பிரகாசமாக` என்பதன் ஈறு குறைந்தது. `உறா` என்பது நீட்டல் பெற்றது. `உற்று, உயிர்த்து, உண்டு` என்றதனால், `கண்டு, கேட்டு` என்பனவும் கொள்ளப்படும். `மாயை -யாலே` என உருபு விரித்து `உறா, உயிர்த்து, உண்டு உறங்கும்` என முடிக்க. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் மாயா காரியங்களால் வருதலால், `மாயையால் உயிர் இவைகளை நுகரும்` என்றார். உறங்குதல் - சுழுத்தி நிலையை அடைதல். `உறா` முதலியவற்றிற்கும், உறங்குதலுக்கும், `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. `மாயையும் உயிர்க்கு உபாதியேயாயினும், நோய்க்கு மருந்துபோல, அஃது உயிர்க்கு நலம் பயக்கும்` என்பது ``அனைத்தாகும் தத்துவம்`` என்பது முதலாகக் கூறப்பட்ட பொருள்.இதனால், முன் மந்திரத்தில் ``அணுச் செய்தி`` எனக் கூறப்பட்ட பொருள் அன்னது ஆமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage