
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
பதிகங்கள்

என்னை யறிய இசைவித்த என்நந்தி
என்னை யறிவித்(து) அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியில் சொருபம் புறப்படத்
தன்னை யளித்தனன் தற்பர மாகவே.
English Meaning:
After Self-Realization is the Light Where No Self is``Realize the Self,`
—So taught my Nandi;
When I realized the Self,
He placed me in place where the Self is unknown;
There the Light-Form arose,
And He granted me Himself,
Tat-Para I became.
Tamil Meaning:
எனக்குக் குருவாகிய நந்திபெருமான், முதலில் என்னை யான் அறியுமாறு அறிவித்தருளினார். (கருவிக் கூட்டத்தி -னின்றும் என்னை வேறாக யான் உணரும்படி செய்தார்.) அதனால், என்னை யான் அறிந்தபின்பு, என்னையான் அறியாது நிற்கின்ற ஓர் இடத்திலே என்னைச் செலுத்தினார். (சிவபோத மிகுதியால் சீவ போதம் தோன்றாது நிற்கின்ற திருவருள் நிலையிலே செலுத்தினார்.) பின்னர் அங்ஙனம் நின்ற அந்த ஒளியினாலே அவ்வொளிக்கு முதலாகிய பொருள் புலப்பட்டது. புலப்பட்டபின் யான் அந்த மேலான பொருளே ஆகும்படி அதனை என் கைக்குள் வருமாறு அளித்தார்.Special Remark:
`என்னை அறிய இசைவித்தது`, ஆன்ம தரிசனம்` என்றும், `என்னை அறியாதவிடத்து உய்த்தது`, `ஆன்ம சுத்தி` என்றும், `சொரூபம் புறப்படத் தன்னை அளித்தது`, `ஆன்ம லாபம்` என்றும் உணர்க. முன் மந்திரத்தில் கூறியன தத்துவ ரூபம் முதல் ஆன்ம ரூபம் முடிவாக உள்ளன ஆகையால், அவற்றிற்குமேலே எஞ்சியுள்ள பயன்களைப் பரம்பொருள் ஆசான் மூர்த்தியாய் வந்து அருளுதல் இதனால் கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage