
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
பதிகங்கள்

மனமது தானே நினையவல் லாருக்(கு)
இனம்எனக் கூறும் இருங்காயம் ஏவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.
English Meaning:
Constantly Think of Him and Receive GraceThey who constantly think of Him
Will reach into a body,
Glorious and strong;
There, if they adore Lord
In ways appropriate,
They reach, the World of Jnana,
Receiving Grace of the Holy One.
Tamil Meaning:
ஒருங்கிய மனம் தானாகவே சிவனை நினைக்கும் நிலையுடையதாகும். அந்நிலைக்கு மனத்தைக் கொணர வல்லவர் கட்கு, அனைத்துயிர்க்கும் துணையாகின்ற முறையில் அவர்கட்கு அமைந் துள்ள தூல உடம்பும் அவர் ஏவியவற்றையே செய்யும் ஏவலாளியாய்க் கீழ்ப்படிந்து நிற்கும். அக்கீழ்ப்படிதலைக் கொண்டு சிவன்பால் ஏற்புடைய செயல்களைச் செய்தால், இப்பிறப்பிலேயே அவர் செய்யும் செயல்கள் எல்லாம் மிகவும் சிவன் செயலேயாய்விடும்.Special Remark:
`அவர்கட்குப் பந்தம் ஆகா` என்பதாம். ``நினைய`` என்பதன்பின், `செய்ய` என ஒரு சொல் வருவிக்க. ஏவல் தணிவு - ஏவலிற்படும் பணிவு. தக்கன சரியை கிரியா யோகங்கள். `புவிக்கே போதப் புனிதன் செயல் ஆகும்` என இயைக்க. புவி - நில உலகம். இதனால், `இப்பிறப்பு` என்பது குறிக்கப்பட்டது. ``புவிக்கு`` என்பது உருபு மயக்கம். போத - மிகவும்.இதனால், முன் மந்திரத்திற் கூறியவாறு மனம் ஒருமிக்கச் செய்தலின் பயன் கூறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாயும் ஆயிற்று.
``மெய்ம்மையாம் உழவைச் செய்து,
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்பராகில்
சிவகதி விளையு மன்றே`` *
என்னும் அப்பர் திருமொழியை இவ்வதிகாரத்துடன் கூட்டியுணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage