
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
பதிகங்கள்

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.
English Meaning:
How to Receive GraceHow is it they received Lord`s Grace? you ask;
(Well it is thus:)
In the battle of life,
Their bewildered thought wandered;
They trained its course;
And freed of darkness,
They sought Lord,
And adored His Holy Feet.
Tamil Meaning:
`திருவருளைப் பெற்றவர் அதனைப் பெற்றது எதன்பொருட்டு` என்று அறிய விரும்பினால், அவர் அத்திருவருளால் மலம் நீங்கப்பெற்ற தமது அறிவுகள் அத்திருவருளே கண்ணாக அத்திருவருட்கு முதலாகிய சிவத்தை ஆராய்ந்து அவ்வாராய்ச்சியால் முன்பு நீங்கிப்போன மலத்தின் வாசனை தங்கியுள்ள தங்களது அறிவை அவ்வாசனையும் அற்ற தூய அறிவாய் நிற்கும்படி செய்து, இங்ஙனம் அரிதிலே பெறப்பட்ட பொருளாய் உள்ள இவனது திருவடியையே விடாது பற்றி, அவற்றின்கீழ் அடங்கியிருப்பர்.Special Remark:
`அவர் திருவருள் பெற்றது இந்நிலையை அடைதற் பொருட்டே; வேறொன்றின் பொருட்டன்று` என்பதாம்``யாஅம் இரப்பவை,
பொருளும், பொன்னும், போகமும் அல்ல, நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும்
உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே``9
என்னும் சான்றோர் மொழியினை எண்ணுக. இம்மந்திரத்தின் பொருளைச் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தாலும், அதன் உரையாலும் உணர்க. `எனகொல் என அறிய` என ஒருசொல் வருவிக்க. அமர்தல் - விரும்புதல். சிந்தை, அறிவைக் குறித்த ஆகு பெயர். முன்னர், `சிந்தையின் கண்` என ஏழாவது விரிக்க. `அருமைப் பொருளாய்` என ஆக்கம் விரிக்க. தாம், அசை, ஏகாரம், தேற்றம்.
இதனால், மேல், ``எல்லாம் அறியும் அறிவுதனை விட்டே`` என்னும் மந்திரத்திற் கூறியது வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage