
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
பதிகங்கள்

எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி
பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.
English Meaning:
How to Mount Steed of TruthWhether you reach Yogic climax or not
Is God`s Grace;
That is the Way of Redemption,
The Great Nandi taught;
If the deceptive senses nine you subdue,
Well may you mount the steed of Truth.
Tamil Meaning:
யாதானும் ஒன்று கிடைப்பது அல்லது கிடையாது ஒழிவது ஆகிய இந்நிலையை திருவருளால் அமைவது. இதனை உத்தம குருவாகிய எங்கள் புகழ்மிக்க நந்திபெருமான் நாங்கள் உய் வடைதற் பொருட்டு எங்கட்கு அருளிச்செய்தார். ஆகவே, ஒன்றைப் பெற வேண்டியோ, அல்லது போக்க வேண்டியோ பொய்யை மேற் கொள்ளத் தேவையில்லை. ஆயினும் யோகியரே இந்நிலைமையைத் தெளிபவர்கள். அந்த யோகம் வாய்க்கவேண்டினால், பொய்ப் பொருளிலே பூசையை உண்டாக்குகின்ற நவத்துவாரங்களையும் அடைத்தலாகிய இமய நியமங்களைக் கைக்கொளல் வேண்டும். கைக்கொண்டால் உண்மையான வாசியோகம் எளிதாக அமையும்.Special Remark:
ஐம்பொறிகளில் மெய் தவிர ஏனைய நான்கும் ஏழு துளைகளாய் உள்ளன. கன்மேந்திரியங்களில் எருவாய், கருவாய் இரண்டைக் கூட்ட ஒன்பது துவாரங்களாம் `எருவாய்` வழியாக அபானனைத்தடுக்க வேண்டும்` என்பதும் யோக நூல் முறைமை, `உலகத்தார் ஊர்வன பொய்க்குதிரை` என்றற்கு வாசி யோகத்தை ``மெய்யென் புரவி`` என்றார்.இதனால், `வாய்மையை நன்கு கடைப்பிடித்தற்கு வழி யோகம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage