
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
பதிகங்கள்

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப்
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு)
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.
English Meaning:
Give Up Deceptive Bodily ThoughtsNandi imprinted
His Holy Feet on my heart;
None have drawn the bolt of His door
And glimpsed Him in;
Give up unreserved,
Thoughts of this deceptive body;
Sorrow`s receptacle it is;
Then unbolt the Sushumna door
Rich, indeed, shall your reward be.
Tamil Meaning:
உயிர்களின் உள்ளங்களாகிய கோயிலுக்கு உள்ளே சிவபெருமான் தனது நிலையான திருவடிகளை விரும்பி வைத்து விளங்குகின்றான் அக்கோயில் பூட்டப்பட்டுள்ளது. ஆயினும் அப்பூட்டைத் திறத்தற்குரிய திறவுகோல்கள் மக்கள் எல்லாரிடத்திலும் உள்ளது. இருந்து அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி அந்தப் பூட்டைத்திறந்து சிவனைத் தரிசிப்பவர் யாரும் இல்லை. அதற்குக் காரணம், அருவருக்கத் தக்க பொருள்களைப் பொதித்து வைத்து மூடியுள்ள பைகளை அவர்கள் `பொய்` என்கின்ற கயிற்றால் இறுகக் கட்டி, அவற்றைக் காவல் புரிந்து கொண்டிருப்பதாகும். மாணவகனே, நீயும் அவர்களைப்போல இருந்தும் விடாமல் அந்தப்பைக் காவலை உண்மையாகவே விட்டு, உன் கையில் உள்ள அந்தத் திறவுகோலால் அந்தக் கோயிலைத் திறப்பாயாயின், கிடைத்தற்கரிய பேறு உனக்குக் கிடைக்கும்.Special Remark:
``தாள்மேவிய`` எனச்சினைவினை முதல்மேல் நின்றது. கைத் தாழ் - இயல்பாகவே கையில் இருக்கின்ற திறவுகோல். என்றது, பிராணனை. பொய்த்தாழ் - பொய்ம்மையாகிய திறவுகோல். தாழ் இடுதல் - பூட்டுதல், பின்னர், `பை` என வருதலால், இவை பையைக் கட்டுகின்ற கயிற்றையும், கட்டுதலையும் குறித்தன. பையாவது உடம்பு.``இடும்பைக்(கு) இடும்பை இயல்உடம்பி தென்றே
இடுபொய்யை மெய்யென் றிராதே`` 9
என ஔவையாரும் கூறினார். `பைம்மறியாப் பார்க்கப்படும் 8என்பது நாலடி பின் இரு தாள்கள் `தாழ்` என்பதன்மரூஉ. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், `வாசியோகத்தால் சிவனைத்தரிசித்தல் கூடும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage