
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
பதிகங்கள்

எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன்
மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில்
ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.
English Meaning:
When Lord Reveals to the TruthfulWhen thus He in your thoughts abides,
Meditate on Him day and night;
Then will He in cranium above appear;
And if you give up falsehood and fleshy desires,
The Lord in truth reveals to you.
Tamil Meaning:
ஒருவன் எய்தற்கரிய மானுடப் பிறவி தனக்கு எய்தி யிருப்பதையும், அதன் நிலையாமையையும் உணர்ந்து காலை, மாலை இருபொழுதும் சிவன் வகுத்த உலகியல் அருளியல் இரண்டிலும் வாய்மையையே கடைப்பிடித்து ஒழுகுவானாயின்` அதுவே வருங்காலத்தில் அவன் பயனடைதற்கு ஏற்ற நெறி முறையாகும். சிவபெருமானும் அவ்வழியில்தான் புலப்பட்டு நிற்பான்.Special Remark:
`ஆகவே, எவ்வகையிலும் பொய்மையைப் பற்றாதொழிக` என்பதாம்.``பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று`` *
எனவும்,
``பொய்கடிந்(து) அறத்தின் வாவ்வார்;
புனற்சடை முடியார்க்கு அன்பின்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்`` 8
எனவும் அருளிச்செய்தமை காண்க. செய்தல், சொல்லாலும், செயலாலும் நிலைநிறுத்துதல். `சிறிதளவு காலத்தையும் பொய்மையில் செலவழித்தல் கூடாது` என்பது, ``எய்திய காலத்து இருபொழுதும் சிவன் - மெய்செயின்`` எனப்பட்டது.
இதனால், `உய்தி வேண்டுவார்க்குப் பொய்மை கூடாது` என்பது வலியுறுத்தப்பட்டது. ஐம்புல விருப்பமே பொய்க்குக் காரணமாகும்` என்பதைக் குறிக்க அதுவும் உடன் விலக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage