
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
பதிகங்கள்

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன்எம் பெருமான்
உயப்போ கெனமனம் ஒன்றுவித் தானே.
English Meaning:
Follow Lord and Be RedeemedControl the senses that tempt,
Sunder the Pasas that corrupt,
Follow Lord,
Who your confusion ends;
If you do so,
Unhesitating my Siva says,
``Be you redeemed;``
And makes your thoughts
Centre on Him.
Tamil Meaning:
தன் அடியார்களுடைய ஐம்புல ஆசையாகிய பாசங்களைப் போக்கி, அவர்கள் கலக்கத்தை நீக்கித் தெளிவைத் தருகின்றவன் சிவன் ஆதலின், அவனை அறிவினாலே பற்றுங்கள்; பற்றினால், அவன் சற்றும் தாழாது, உங்களை `உய்யப் போக` எனத் திருவுளம்பற்றி, உங்களுடைய மனங்களை ஒருவழிப்படுத்துவான்.Special Remark:
துயக்கறுத்தமை தம்மை உள்ளிட்ட பலரது அனுபவம் பற்றிக் கூறினார். அறிவால் தொடர்தல், சரியை, கிரியை யோகங்களில் இயன்றவாற்றால் பற்றுதல். என்னை? தொடர்ந்து நிகழ்வன அவையேயாதலின். `மனம் பல வழியிற் சென்று அலைதலானே அது பொய்ம்மையையும் ஏற்கின்றது; ஆகவே, மனம் ஒருவழிப்படின் பொய்ம்மையும் இல்லாதொழியும்` என்பதாம். `போக` என்னும் வியங்கோளின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. தெளிவுபற்றி எதிர்காலம் `ஒன்று வித்தான்` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.இதனால், `யோகம் இயலாதவர் சரியை கிரியைகளாலாயினும் பொய்ம்மையைப் போக்கற்பாலர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage