
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
பதிகங்கள்

உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.
English Meaning:
Lord Abides in the Heart of the FaithfulSeeking the Way of Redemption
Adore Lord with feeling intense;
Sure, sure, Hara`s Grace yours shall be;
In the heart of those who untruth utter not
He shines;
In their midst He abiding stood.
Tamil Meaning:
பொய்ம்மையைச் சிறிதும் இல்லாது உறுதியாக அப்பாற்போக்கி, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் வாய்மை விளங்க நிற்பாரது நடுவிலே சிவனும் விரும்பி எழுந்தருளி யிருக்கின்றான். ஆகையால், உய்தியின் பொருட்டு, அந்த நிலைமையை உணர்ந்து சிவனைத் துதியுங்கள் அப்பால், மெய்ம்மையின்கண் உள்ளவனாகிய சிவனை அடையும் வழிதானே கிடைப்பதாகும்.Special Remark:
``திண்ணென`` என்பது தொடங்கி உரைக்க. ஒன்றும் - சிறிதும். புறத்திலும் வாய்மை பொலிதலாவது, கொள்ளும் கோலங்கள் அகத்தில் கொள்ளும் எண்ணங்களுக்கு ஏற்றவையாய் யிருத்தலும், நெஞ்சில் கரவு இன்மையால் முகம் மகிழ்ச்சியாற்பொலிதலும் போல்வன. நடு அங்கே - நடுவாகிய இடத்திலே. அமர்ந்து - விரும்பி. ``அடியார் நடுவுள் இருவீரும் இருப்பதானால்``l என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார்.இதனால், `அகத்தும், புறத்தும் வாய்மையால் விளையும் தூய்மையே சிவநெறியும் ஆகும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage