
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பதிகங்கள்

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.
English Meaning:
True Disciple humbles before the Renunciate VedantinVedanta is the way of renouncing desires;
And so, divert your life`s course
And take to Siddhanta-Vedanta Way
And humble your head at the feet of Guru
That has renounced all in the Vedanta way
Then verily are you disciple true.
Tamil Meaning:
காமியத்தை நிரப்பும் நெறி வேத நெறியாக, அதனை விடுத்து நிட்காமியமாவது சிவனிடத்துச் செய்யும் பத்தியே யாதலாலும், ஒழுக்கமாகிய நீரை உலகியலாகிய மடையினின்றும் மாற்றிச் சித்தாந்த நெறியாகிய மடையிற் பாய்ச்சி ஆசையை ஒழிக்கும் உண்மை வேதாந்தியே குருவாகத்தெளிந்து அவன் திருவடிகளில் தாழ்ந்து வணங்கி, அவன் வழி நிற்பவனே சற்சீடனாவன்.Special Remark:
`வேதத்தை வேட்கைவிடும் நெறி` என்றமை யால், `வேத நெறி அதனையுடையது` என்பது பெறப்பட்டது. அஃதாவது, பலவகை வேள்விகளால் இம்மை மறுமை உலகங்களில் உள்ள இன்பத்தை அடையும் நெறியாம். ``வாழ்க்கை`` என்றது ஒழுக லாற்றை. `புனலைச் சித்தாந்தத்து ஆக வழிமாற்றி என்க. வழி, இயல் பாய் அமைந்த உலகியல் `ஆக` என்பது தொகுத்தப்பட்டது. முதல் மூன்று அடிகளால், `உண்மை வேதாந்தியாவன் சித்தாந்தியே` என்பது உணர்த்தப்பட்டதாம். இதன்கண் மூன்றாமெழுத் தெதுகை வந்தது.இதனால், சற்குரு (நல்லாசிரியன்) கிடைக்கப் பெற்றோனே பக்குவியான சற்சீடன் (நன்மாணாக்கன்) என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage