
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பதிகங்கள்

சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது.
ஆதியும் ஏதும் அறியகில் லானே.
English Meaning:
Auspicious Days for receiving InstructionIn the asterisms of Swati and Visakha
In the conjunction of Lagnas Vrischika and Kataka,
Of the Guru, the holy precepts you receive;
Except it be them who stand in the path of virtue
The Primal One knows none.
Tamil Meaning:
`விரிச்சிகமும், கற்கடகமும் என்னும் இரண்டு ஓரைகளையுடைய `சுவாதி, விசாகம்` என்னும் இரு நட்சத்திங்கள் பொருந்திய, முன்னோர் சொல்லிய இருநாட்களே குருமொழியை உணர்தற்கு உரிய நாள்கள்` என்று மரபு நெறியின் சிறப்பை எண்ணுவாருள் அங்ஙனம் உணர்ந்து ஒழுகுவார்க்குக் கூறியதல்லது, இறைவனும் அதற்குரிய காரணம் எதனையும் எங்கும் சொல்லி வைக்கவில்லை.Special Remark:
`அதனால், இன்றியமையாத பொழுது ஆசிரியர் எந்த நாளையும் நாளாக, எந்த ஓரையையும் ஓரையாகக் கொள்ளலாம்` என்பதாம். `தேள், நண்டு தொடர்ந்த சோதி விசாகம் ஓதிய இருநாளே உணர்வது` எனக் கூட்டுக. `தொடர்ந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. உபதேசித்தற்கு ஆசிரியர் தாம் கொள்ளும் ஓரைதேளும், நண்டும் ஆதல் வேண்டும்` என்றமையால் அவற்றிற்கு ஏற்ற மாதம் தாமே அமையுமாதலின், அது கூற வேண்டாதாயிற்று. நீர்மை, ஆசிரியர் ஆணைவழியே நிற்றல் ``நினைந்தவர்க்கு`` என்பதனஅபின், `உணர்த்தியது` என ஒருசொல் வருவிக்க. ஆதி - முதல்வன், இறைவன். உயிர்வர மூன்றாமடியிறுதியில் குற்றுகரம் கெடாது நின்றது. `அவ்வாதியும், என ஓதலுமாம். `அறிவிக்கிலான்` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.இதனால், பக்குவிகட்குப் பயன்படுவன சிலகால மரபுகள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage