
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பதிகங்கள்

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.
English Meaning:
Lord! Grant me Your GraceYou, Supreme Lord!
Seeking You, I lost all sense of fear;
Now I wander not,
And seek not another`s company;
Shatter, Lord, my Karmas
Uproot them from my very thoughts
And kick them off;
Grant me Your Grace Own me,
And make me Your slave forever.
Tamil Meaning:
யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும் பியே அடியேன் துடித்தேன்; அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவரது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழி யும் படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.Special Remark:
`என்று பக்குவிகள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர்` என்றவாறு. எனவே, இம்மந்திரம் அவர்களது கூற்றாம். ``ஒழிந்தேன்`` என்பவற்றில் ஒழிதல் துணிவுப் பொருள்மைக் கண் வந்தன. அகைதல் - அறுத்தல். இங்கு உயிரெதுகையும், மூன்றாம் எழுத்தெதுகையும் வந்தன. ``சிந்தின`` என்பது முற்றெச்சம் `அதைத்து`, `சிந்தனை` என்பன பாடமல்ல. அறக் கருணைசெய்து ஆளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்றற்கு, `திருவடி சூட்டி` என உயர் சொற்கூறாது, `உதைத்து` எனத் தாழ்சொற் கூறப்பட்டது.இதனால், அதிபக்குவர்கள் அருட்பேராசிரியரைக் கண்டவழி அவரை அடையும் வகை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage