
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பதிகங்கள்

சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல
ஆராத காதல் குருபரன் பால் ஆகச்
சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.
English Meaning:
What comes of touch of Guru`s FeetHe is the master of the difficult paths four;
He is the seeker incessant of Jnana divine;
And as he placed his feet on my head,
Higher and higher, my ardour in Jnana soared,
Higher and higher, my love for Gurupara welled up.
Tamil Meaning:
சிறப்புப் பொருந்திய ஞானத்தின் கண் விருப்பம் மிக மிக, அது காரணமாகர ஞானாசிரியன்பால் அடங்காத அன்பு உளதாக, அதனால், அவ்வாசிரியன் அவன் மேல் தனது திருவடியைச் சூட்டி அருள்செய்ய, அவ்வாற்றானே, `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்கு சாதனங்களையும் முற்றி உலகியலில் நீங்கினவனே அறிவுடையோரால் `ஞானி` என ஆராய்ந்து கூறப்படும் முதிர்ந்த ஞானியாவான்.Special Remark:
சீராரும் ஞானம், சிவஞானம். இதில் இச்சை மிகுதல் தீவிரதர சத்திநிபாதத்தினாலாம். `சாராத சாதகம் நான்கும் உற்றேன்` என்றாராயினும், `சாதகம் நான்கினாலும் சாராமை உற்றேன்` எனறலே கருத்தென்க. சார்தற்குச் செயப்படுபொருளாகிய `உலகியல்` என்பது வருவிக்கப்பட்டது ஈற்றடியில் உள்ள ``அடிவைக்கவே`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டி உரைக்க.இதனால், முதிர்ந்த பக்குவத்தில் உளதாம் தீவிரதர சத்திநிபாதத்தில் நிகழும் இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage