
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பதிகங்கள்

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே.
English Meaning:
Seek a proper GuruWhen you seek a Guru
Seek you one, holy and pure;
And then give him your all—
Your body, life and wealth;
And in constancy learn clear,
Not a moment distracting,
You shall sure reach Siva`s State.
Tamil Meaning:
(இதன் பொருள் வெளிப்படை.)Special Remark:
``கொள்ளின்`` என்பது, நல்லாசிரியரை அடையும் பக்குவத்தினது அருமையுணர நின்றது. உம்மை உயர்வு சிறப்பு. உள்ள பொருள் - தம்மிடம் உள்ள அனைத்துப் பொருளும். உடலையும், உயிரையும் நோக்க இப்பொருள் மிகச் சிறிதாகலின், ``உடல் ஆவி யுடன்`` என உயர்பின்வழித்தாய* மூன்றாவதன் ஒருவினை ஒடுஉருபுசொல் கொடுத்துக் கூறினார். `இப்போது நுகர்வனவும், நுகருங்காற் செய்வனவுமாய வினைகளும் பொருளேயாம்` என்பது சித்தாந்தமாதலை இவ்விடத்து நினைக. இடைவிடாமை ஆசிரியரை. தெள்ளுதல் - சிந்தித்தல். அறிதல் - தெளிதல். இவை உபதேச மொழியினை இடைவிடாமை, இவர்றின் பொருட்டேயாம். ``சிவபதம்`` என்பதன் `உளதாம்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. ``தான்`` என்பது தேற்றப்பொருள் தந்தது.இதனால், ஆசிரியரை அடையும் பக்குவர் அவரை அடையுமாறும், அடைந்து பயன் கொள்ளுமாறும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage