
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பதிகங்கள்

சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தம் உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்த
சத்தியின் இச்சை தகுவோன் சற் சீடனே.
English Meaning:
Yet other qualities of Good DiscipleHe scans that which divides the Real and the Unreal,
He melts in the soul of his being
And with Siva`s Grace to guide,
He receives Jnana in devotion true;
And he humbles himself before Lord
And seeks the bliss of His Sakti;
He is the fit one, the disciple good and true.
Tamil Meaning:
சிவனது திருவருள் ஆன்மாவைப் பக்குவப் படுத்தி நன்னெறியை அடைவித்தமையால், `நிலை யுடைய பொருள் நிலை யாமையுடைய பொருள்களின் இயல்புகள் யாவை` என்னும் ஆராய்ச் சியைத் தலைப்பட்டு அவற்றை உள்ளவா றுணரும் உணர்வைப் பெறுதல்பொருட்டு ஆசாரியரை அன்போடு வழிபட்டு, சிவனது ஆனந்தசத்தியில் மூழ்குதற்கண் வேட்கை மிக்கவனே சற்சீடனாவன்.Special Remark:
இரண்டாம் அடியை முதற்கண் வைத்து அதனுள், ``சிவனருள்`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. ``ஆறு`` என்பது அதன்கண் நிற்கும் பொருளைக் குறித்தன, `ஞானம் பெறப் பத்தியின் பணிந்து` என இயைக்க. சிவனது சக்தி ஆன்மாக்களுக்கு முதற்கண் அறிவாயும், முடிவில் ஆனந்தமாயும் நின்று பயன் தருமாதலின், அவற்றை முறையே ``ஞானம்பெற`` எனவும், ``ஆனந்தசத்தியில் இச்சைதகுவோன்`` எனவும் கூறினார்.இதனால் பக்குவர்க்கு ஞான வேட்கை முதிரும் - படிநிலைவகை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage