
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
பதிகங்கள்

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி என்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி அங்கித் தனிச்சுட ராகுமே.
English Meaning:
Nandi is Peerless LuminosityOf Himself He sought me in the Truth`s Way
He the Blessed, the King of Kings,
Nandi, mine Father,
But they know not his intent;
To them that rejoice in Him
As the Nandi of heavenly might,
Verily is He the Peerless luminosity
Of crimson twilight fire.
Tamil Meaning:
`ஞானத்தைப் பெற்றவன் சிவனது இயல்பைத் தனது அறிவில் காணும்படி வைத்த ஆசிரியன் அந்தச் சிவனே என்க` என்னும் சிவனது திருவுள்ளத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறிய வல்ல ஒருவனுக்கு அச்சிவன் மாலைக் காலத்தில் ஏற்றப்பட்ட புறவிளக்குப் போன்று ஒப்பற்ற அக விளக்காய் நிற்பன்.Special Remark:
`நந்தியது சீர்மையை உள்ளே சந்தித்த சீர்` என்க. இச் சீரினைப் பெற்றவன் ஞானியாகையால் ``தான்`` என்றது அவனையே யாயிற்று. `கோன் நந்தி என்னும் குறிப்பு` என்க. மகிழ்தற்கு `அக் கோனை` என்னும் செய்யப்படுபொருள் வருவிக்க. ``அந்தி அங்கி`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது.இதனால், சிவகுருவைச் `சிவன்` என உணர்தலே சிவனது திருவுளத்திற்கு உவப்பாவது என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage