
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
பதிகங்கள்

சித்த மியாவையும் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்த மியாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேஅமர்ந் தானே.
English Meaning:
Guru God IdentityGuru is none but Siva — thus spoke Nandi;
Guru is Siva Himself — this they realize not;
Guru will to you Siva be,
And your Guide too;
Guru in truth is Lord,
That surpasses speech and thought, all.
Tamil Meaning:
உயிரின் அறிவு அறிவன அனைத்தும் சிவன் தனது அருளால் அறிவிப்பனவேயாகும். அந்நிலையில் உயிரின் அறிவு அறிவன யாவையும் உறுதியான சிவனேயாய் முடிந்துவிட்டால், சிவனும் அவ்வறிவில் பிறவற்றைத் தோற்றுவியாது தன்னைமட்டுமே தோற்றுவித்து நிற்பான்.Special Remark:
``சித்தம்`` என்றது அறிவை. `சித்தம் சிந்தித் திருந்திடும் யாவையும் அத்தன் அருளால் உணர்த்துபவதாகும்` என மாற்றுக. முதலடியை மாற்றாது ஆற்றொழுக்காகவே உரைப்பின், அது சித்தத்தின் இயல்பு கூறியதாக்கி அதன் இறுதியில் `அவை` என்பது வருவித்துக்கொள்க. `உணர்த்துவது` என்னும் ஒருமை அத்தொழில் மேல் நின்றது. `உயிரின் அறிவு பக்குவம் எய்தாத பொழுது சிவன் அதன்கண் வினைக்கீடானவற்றை உணர்த்துவன். பக்குவம் எய்திய வழி அவற்றை ஒழித்துத் தன்னையே உணர்த்தி நிற்பான்` என்பது இதன் திரண்டபொருள். `ஞானாசிரியர் சிவன் தன்னையே உணர்த்தி நின்ற அறிவையுடையராதலின், அவர் அச்சிவனேயாவார்` என்பது இதனால், உணர்த்தப்படும் பொருள். எனவே, ``குருவே சிவம்`` என்பது முதலியன அமையுமாறு காட்டியதாயிற்று.இதனால், சிவகுரு சிவமேயாதல் அதன் உண்மையுணர்த்தும் முகத்தால் தெளிவிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage