
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
பதிகங்கள்

பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
தாசற்ற சற்குரு அப்பர மாமே.
English Meaning:
Power of The Guru PresenceGathering the strands of my fetters
He knotted them together;
And then wrenched them off;
Freeing me thus from my fond body,
Straight to Mukti he led me—
Behold, of such holy potent
Is the Presence of the Guru Divine!
Tamil Meaning:
நாட்டவருள் உள்ள ஒருவன்போலத் தோன்றுகின்ற, குற்றமற்ற ஞானாசிரியன், உயிர்ச் சார்பும் பொருட் சார்புமாகிய தளை களின் இயல்பைத் தெளிவித்து, அதனானே அவற்றால் உளதாய கட்டினை அறுத்து, உடம்பின் மேல் உள்ள ஆசையாகிய தொடக்கி னின்றும் ஆன்மாவை விடுவித்து, உலகவரது போலியாகிய இகழ்ச்சிக்கு நாணுதல் இல்லாத முத்தி நிலையை இவ்விடத்தே பெறச் செய்தலால், யாவராலும் போற்றப்படுகின்ற அந்தப் பரமசிவனே யாவான்.Special Remark:
மெய்யுணர்வு வந்தவிடத்து நீங்குவன உலக பாசமே யாகலான், ``பாசம்`` என்றது இங்கு அதனையேயாயிற்று. அதன் இயல் பாவது அழிவுடைமையும், உள்ளபொழுதும் திரிபுடைமையு மாம். ``நேர் நேர்`` என்னும் அடுக்கு வலியுறுத்தற் பொருளது. `நேரே கூட்டலால்` என இயையும். `உலகவர் இகழ்ச்சி இகழ்ச்சியன்றாம்` என்பதை,``சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றி``1
எனவும்,
``நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப``2
எனவும் மணிவாசகரும் அருளிச்செய்தார். இம்மந்திரம் பலவிடத்துப் பாடம் திரிய ஓதப்படுகின்றது.
இவ்இரண்டு மந்திரங்களாலும் சிவகுருவினது பெருமை ஏதுவுடன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage