
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பதிகங்கள்

சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.
English Meaning:
Saiva Path was Laid by Holy NandiThe Holy Nandi, the acclaimed Master of Saiva Faith
Has showed a Way — the Master`s way of Redemption;
That, divine Path of Saiva
He did chalk out for those here below
To walk in Sanmarga`s trail
And be for ever free.
Tamil Meaning:
`சைவ சமயத்தின் ஒப்பற்ற தலைவன்` எனப் பலராலும் அறியப்பட்ட சிவன் ஆன்மாக்கள் உய்தற்பொருட்டு அமைத்த ஞானநெறி ஒன்றே உள்ளது. அது, தெய்வத் தன்மை பொருந்திய சிவநெறியே. உலகத்தில் ஞானத்திற்குத் தகுதியுடையராய் உள்ளார் அதனை அடைந்து உய்தற்கு அந்த ஒன்றையே அவன் அமைத்திருக்கின்றான்.Special Remark:
``சைவ சமயத் தனி நாயகன்`` என்பது எழுவாயும், ``நந்தி`` என்பது பயனிலையாயும் நின்று ஒரு பெயர்த் தன்மைப் பட்டது. ``சன்மார்க்கம் சேர்ந்துய்ய`` என்பது முதலாக மறித்தும் கூறியது, நன்கு வலியுறுத்தற்பொருட்டு.இதனால், உண்மை உய்யும் நெறி சிவநெறியேயல்லது வேறின்மை வலியுறுத்து உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage