
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பதிகங்கள்

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.
English Meaning:
``You Are He`` — Is the Teaching of the True PathSiva laid the divine path ancient
That leads to the Home Eternal
Seek Him that way;
It is He who is sought by other path also.
You shall duly find Him within yourself. .
Tamil Meaning:
தெய்வந் தெளிந்து அதன் இயல்பை ஆராயும் எல்லாச் சமயங்களையும் உலகில் ஆக்கி வைத்தவன் சிவபெருமானே எனினும் அவற்றுள் முற்பட்டதாகிய சமயம் சைவமே. அதனை அடைந்தோர் `இச்சமயக் கடவுளாகிய சிவனே ஏனைச் சமயங் களினும் நின்று பயன் தருகின்றான்` என்பதை உணர்வர். அங்ஙனம் உணர்ந்தவர்க்கு அவன் அச்சமயங்களில் ஏற்ற பெற்றியால் நின்று அருள்புரிதலும் விளங்கும்.Special Remark:
ஓர்தல் - ஆராய்தல் `ஓர் நெறி` என இயையும். `பவன்` என்பது சிவனது நாமங்களில் சிறந்ததொன்று. ``பழவழி`` என்றது, `முன்னர்த் தோன்றியநெறி` என்றவாறு.``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி`` 1 என அப்பரும் அருளிச்செய்தார். மூன்று, நான்காம் அடிகளில் வந்த ``அவன்`` என்பன, பிற சமயக் கடவுளரைத் தனித்தனிச் சுட்டிற்று. ஈற்றடியில் நின்ற ``அவன் அவன்`` என்பது ஒரு சொல் அடுக்கு `அவன் அவனாய் உளது` என ஆக்கம் வருவிக்க. ``உளது`` என்பது அப்பண்பு குறித்துநின்றது. கடன்முறைமை. `உள்ள முறைமை` என்பதனை ``உளதாங் கடன்`` என்றார். இறுதிக்கண் ``ஆம்`` என்றது `விளங்கும்` என்றவாறு.
இதனால், `அகச் சமயத் தோர்களிடமாக நின்று அருள் பவனும் சிவனே` என்பது கூறப்பட்டது.
``யாதொரு சமயங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்`` 2
என்ற சிவஞான சித்தியையும் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage