
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பதிகங்கள்

அரனெறி யாவ தறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.
English Meaning:
Lord Ever GuidesNow have I realized the Path of Hara;
In the past I sought Him in narrow paths
And strayed;
Lo! all the while He stood before me
Like a beacon light in firmament
Guiding my voyage
Across the sea of my Soul`s longing.
Tamil Meaning:
அகமாகிய சிவநெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்திலும் ஞான நெறியால், அளவற்ற எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுதற்குரிய உயர்ந்த நெறியாய் உள்ள ஒப்பற்ற ஒளி நெறி யாவது சிவனது நெறியே யாதலை அறிந்தவனு மாயினேன் நானும்.Special Remark:
ஆகவே, `அகநெறியில் (உட்சமயங்களில்) நிற்போர் சிவநெறியை அடைந்து உய்யும் நிலையைப் பெறுவர்` என்றவாறு. உம்மைகள் இரண்டனுள் முன்னது உயர்வு சிறப்பும், ஏனைய இழிவு சிறப்புமாம். ``அறிந்தேனும்`` என்பதன்பின் `ஆயினேன்` என்பது எஞ்சிநின்றது. முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. உரம் - ஞானம். ``உள்ளம்`` என்றது, அதன்கண் தோன்றும் எண்ணத்தை,``கருதுப - கோடியும் அல்ல பல``1
என்ப ஆகலின், அவற்றைக் கடலாக உருவகித்தார். `அவற்றைக் கடத்தல் ஞானம் துணையாய வழிக் கூடும்` என்பதையும், அத் துணையைத் தருவதே உயரிய நெறி என்பதையும், அதனால், அஃது `ஒளிநெறி` எனப்படுகின்றது என்பதையும் எடுத்தோதி, `அவ் ஒளி நெறி அரன் நெறியே` என்பது உணர்த்தினார். `இதனை அடைதல் உட் சமயிகளுக்கல்லது இயலாது` என்றவாறு. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், உட்சமயங்கள் சிவநெறிக்குத் தடையாகாது துணையாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage