
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பதிகங்கள்

மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.
English Meaning:
Vision Through Saiva PathHe that belongs to the Lady of Lightning Form
He that belongs to the Vedic Fire of Brahmins
He that belongs to them that think of Him
He, the Primal Lord
He, the tender shoot of Jnana,
When you glimpse His loving signs,
Then have you walked in Path of Siva.
Tamil Meaning:
பெண்ணாகச் சொல்லப்படுகின்ற சத்தியாகிய நல்ல வடிவினையும், அந்தணர்கள் வேதத்தின்வழி வளர்க்கின்ற அக்கினி யாகிய வடிவினையும், அன்பர்கள் நினையும் நினைவாகிய வடிவினையும் உடைய சிவபெருமானை ஞானத்தின் முடிநிலை யாகிய அந்த வழியாற் காணுதல் உண்டாகுமாயின், அப்பொழுது சிவநெறி கைவந்ததாம்.Special Remark:
`மின்னாகிய நற்குறி` என்க. பின்னர்க் கூறப்படும் வடிவங்கள் பலவற்றினும் சிறப்புடையது இதுவேயாதல் பற்றி இதனை, ``நற்குறி`` என்றார். `சிவன்` என்னும் பொருட்டாய் நின்ற, ``ஆதிப்பிரான்`` என்பதை, `நினைக் குறியாளனை` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நினை` முதனிலைத் தொழிற்பெயர். `அஃது` என்னும் பொருட்டாகிய `அனைத்து` என்பது ஈறுகுறைந்துநின்றது. `அயக்குறி, நயக்குறி` என்பன பாடமல்ல. ஆதல், இங்கு கைவருதல்.இதனால், சிவநெறி முதல்வன் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பலவகையில் நின்று தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage