
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பதிகங்கள்

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.
English Meaning:
Lord Pervades All Six Inner FaithsHe is the Ancient One,
He created the beings, of earth and heaven,
In days of yore, in Order Divine;
The Six Faiths seek the Feet
But of the One Primal Peerless God;
And in them all He pervades
In measure appropriate.
Tamil Meaning:
தேவர்களையும், மக்களாகிய எம்மையும் உய்தி பெறுதற்குப் பொருந்தும் வகையினராகப் படைத்த அனாதியான பழையோன், அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியையே நாடி நிற்கும்படி அமைய, அவற்றைக் கடந்து நிற்கும் முதல்வனாகின்றான்.Special Remark:
எழுவகைப் பிறப்பினுள் தெய்வப் பிறப்பும், மக்கட் பிறப்பும் ஒழிந்தவை பெரும்பாலும் வீடு பெறுதற்கு வாயிலாதல் இல்லையாக, இவ்விரு பிறப்புக்களுமே அதற்கு வாயிலாதல் வெளிப் படை. `அவை அங்ஙனமாதலும் இறைவனது திருக்குறிப்பின் வழியது` என்பதும், `அவ் இருவகைப் பிறப்பின் உயிர்களும் உய்தி பெறுதல் அகச் சமயங்களின் வழியே` என்பதும், `அங்ஙனமாயினும் இறைவனது உண்மை நிலை சமயங்களைக் கடந்தது` என்பதும் கூறிய வாறு. ``சமையம்`` என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. `தன் தாளினை நாட அமைந்தன` என்பதனால், ``சமயங்கள்`` எனப் பட்டன உட்சமயங்களே ஆயின. `அமையக் கழல்கின்ற` என்னும் ககர ஒற்று மெலிந்து நின்றது. இவ்வாறன்றி, `அச்சமயங்களது (செவ் வழிகளை) நிலைகளைக் கடந்து நிற்கின்ற எனலுமாம்.இதனால், வீடுபெறும் உயிர்கட்கு அதற்குரிய வழிகளாய் நிற்பன அகச் சமயங்களே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage