
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
- ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்
- ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
- ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
- ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
- ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
- ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
- ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
- ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
- ஏழாம் தந்திரம் - 15. போசன விதி
- ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
- ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
- ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
- ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
- ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
- ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
- ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்
- ஏழாம் தந்திரம் - 28. புருடன்
- ஏழாம் தந்திரம் - 29. சீவன்
- ஏழாம் தந்திரம் - 30. பசு
- ஏழாம் தந்திரம் - 31. போதன்
- ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
- ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
- ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
- ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
- ஏழாம் தந்திரம் - 38. இதோபதேசம்
- ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
Paadal
-
1. குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.
-
10. சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.
-
11. போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.
-
12. தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.
-
13. கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. -
2. கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறுமவன் றானே அமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.
-
3. அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.
-
4. முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
-
5. ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.
-
6. பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
-
7. இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.
-
8. பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.
-
9. நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.