
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பதிகங்கள்

போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.
English Meaning:
Redeem the Senses By Intelligence and PrayerPraise the Holy Form
Of the Pure One;
Praise Him,
The Senses redeeming by intelligence;
In your heart welling up in love,
You shall become one with Him,
—He the Lord of directions four
And of beings, in others all.
Tamil Meaning:
சிவனது திருமேனியைத் துதிக்குமாற்றால் பருப் பொருள்களாய் உள்ள அவைகளைச் சார்ந்துள்ள புலன்களை விரும்பிச் செல்கின்ற மனத்தை அச்செலவினின்றும், மீட்டு, மீண்டும் அதனையே துதி. அங்ஙனம் துதித்தால், அப்பெருமானை அவனது ஆனந்தத்தைப் பொழிகின்ற மனத்திலே ஒன்றியிருக்கச் செய்தலும் கூடும்.Special Remark:
`புனிதன் திருமேனியைப் போற்றிசைத்துப் புலன் ஐந்தும் புத்தியால் மீட்டுப் போற்றிசெய்` என்க. பருப்பொருள்மேல் செல்கின்ற மனத்தைப் பருப்பொருள் வழியாகவே மீட்டலும், நிலை நிறுத்தலும் வேண்டும் என்பது பற்றி, `திருமேனியைப் போற்றி செய்து மீட்டுப் போற்றி செய்` என்றார். ``புத்தியால்`` என்றது, `இஃதே அறிவாம்` என்றபடி. ஊற்றுகை - ஊற்றுதல்; பொழிதல், தொழிற் பெயர். இதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஊற்றுகை உள்ளம் - ஊற்றுதற்கு இடமாய் உள்ள உள்ளம். உம்மை, சிறப்பும்மை.இதனால், `திருமேனி வழிபாடு இந்திரிய அடக்கத்தைத் தரும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage